முகப்புகோலிவுட்

‘மாஸ்டர்’ வெளியீடு எப்போது.? படக்குழுவின் திட்டம் தான் என்ன? சில தகவல்கள் உள்ளே.!

  | July 04, 2020 00:04 IST
Vijay

இப்படத்தின் ட்ரைலர் வெளியீடு குறித்த அறிவிப்பு கூட செப்டம்பர் மாதத்திற்கு பிற்கு தான் வெளியாகும் என்பது தெளிவாகிறது.

2020-ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பாரக்கப்படும் திரைப்படமாக ‘தளபதி' விஜயின் ‘மாஸ்டர்' உள்ளது. கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதியே வெளியாகவிருந்த இப்படம், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பூட்டுதல் அறிவிக்கப்பட்டதை அடுத்து, படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்படம் திட்டமிட்டபடி வெளியாகியிருந்தால், இச்சமயம் ரூ. 300 கோடி வசூலை ஏட்டியிருக்கும் எனக் கூறப்படுகிறது.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் வாத்தி கம்மிங், வாத்தி ரெய்டு, அந்த கண்ண பாத்தாக்க, பொளக்கட்டும் பறை, குட்டி ஸ்டோரி ஆகிய பாடல்களின் லிரிக்கல் வீடியோக்கள் வெளியாகி வைரலாகிவருகிறது. இருப்பினும் படத்தின் அடுத்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், ‘மாஸ்டர்' படக்குழுவினர் படத்திற்கான தெளிவான திட்டங்களைக் கொண்டுள்ளதாகவும், செப்டம்பர் மாதத்தில் கொரோனா வைரஸ் பயம் முற்றிலுமாக நீங்கிவிட்டால், நவம்பர் 14 ஆம் தேதி தீபாவளி வெளியீடாக திட்டமிடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுளளன. அப்படியானால், ஆயுதா பூஜையான அக்டோபர் 25-ஆம் தேதி ட்ரைலர் வெளிவரும் என்றும் தெரிகிறது.

இதற்கான மாற்று திட்டத்தையும் படக்குழு கொண்டுள்ளதாக தகவல் உள்ளது. அதாவது COVID 19 தொற்றுநோய் செப்டம்பர் மாதத்திற்கும் மேல் நீடித்தால், ‘மாஸ்டர்' 2021 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிடலாம் என்றும், அப்படியானால் டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் தினத்தன்று ட்ரைலர் வெளியிடப்படும் என திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

74ls1o4o

ஆகமொத்தத்தில் இப்படத்தின் வெளியீடு மற்றும் ட்ரைலர் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ தகவல் செப்டம்பர் மாதத்திற்கு பிற்கு தான் தெளிவாக அறிவிக்கப்படும்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி' விஜய் மற்றும் ‘மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் 'மாஸ்டர்'. இப்படத்தில் மாளவிகா மோஹனன் கதாநாயகியாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் நடிக்கிறார். சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்.பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தல் அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ், ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ரம்யா சுப்பிரமணியன் மற்றும் கௌரி கிஷன் என பெரும் நட்சத்திர பட்டாளமே உள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com