முகப்புகோலிவுட்

தளபதி 64 படத்தின் இயக்குநர் மற்றும் இசை அமைப்பாளர் இவர்கள்தான்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

  | June 07, 2019 17:01 IST
Vijay

துனுக்குகள்

  • தளபதி 64 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்
  • அனிருத் இப்படத்திற்கு இசை அமைக்கிறார்
  • சத்யன் சூரியன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்
விஜய் இப்போது அட்லி இயக்கிவரும் தனது 63வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இவர்களுடன், யோகி பாபு, கதிர், விவேக்,ஆனந்த் ராஜ் இன்னும் பலர் நடித்து வருக்கின்றனர். விறுவிறப்பாக நடந்துவரும் இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் முடித்து இந்தாண்டு தீபாவளி அன்று படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
 
இந்நிலையில் விஜய்யின் 64 படத்தை யார் இயக்கப்போகிறார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் விஜய்க்கு கதை சொல்லி இருந்தார். தற்போது அவர் படத்தை இயக்குவது உறுதியாகியுள்ளது. மேலும் படத்தின் கேமராமேனும் எடிட்டரும் உறுதி செய்யப்பட்டுள்ளார்கள். தளபதி 64 ல் இயக்குநருடன் கைதி படத்தில் வேலை செய்த ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் முகமூடி, யுத்தம் செய், தீரன் அதிகாரம் ஒன்று, கைதி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர்.
 
அனிருத் இப்படத்திற்கு இசை அமைக்கிறார். கத்தி படத்திற்கு பிறகு அனிருத் மீண்டும் இரண்டாவது முறை விஜய்யுடன் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்