முகப்புகோலிவுட்

“வெறித்தனம்” பாடலில் தளபதியின் வெறித்தனமான ஆட்டம்!

  | November 06, 2019 15:05 IST
Thalapathy

துனுக்குகள்

 • பில் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 120 வசூல் சாதனை செய்துள்ளது
 • உலகளவில் 240 வசூல் சாதனை செய்துள்ளது பிகில் திரைப்படம்
 • இப்படத்தின் வெறித்தனம் வீடியோ பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த மாதம் 25ம் தேதி வெளியான ‘பிகில்' திரைப்படம் விமர்சன ரீதியாக தோல்வியை தழுவினாலும் பொருளாதார ரீதியாக வெற்றி பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.
 
நயன்தாரா, யோகி பாபு, கதிர், விவேக் இந்துஜா, இந்திரஜா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது. 

வெளியான மூன்றே நாளில் 100 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்தது இந்த படம். 
தற்போதைய தகவல்படி தமிழத்தில் மட்டும் 120 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை செய்தள்ளது. உலகளவில் 240 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனைப்படைத்து வருகிறது.


இந்நிலையில் பிகில் படத்தின் "வெறித்தனம்" பாடல் ஒன்றை படக்குழு யுடியூபில் வெளியிட்டுள்ளனர். விஜய்யின் டான்ஸ் இந்த பாடலில் அமர்க்களமாக உள்ளது. இதற்கு முன்னர் இப்படத்தில் இடம்பெற்ற "பிகிலு பிகிலு பிகிலுமா" என்ற பாடல் வெளியாகி தற்போது ட்ரெண்டில் 4 வது இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் அடுத்ததாக "வெறித்தனம்" பாடலை ஒரே நாளில் நமபர் 1 ட்ரெண்டில் கொண்டுவர விஜய் ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகிறார்கள்.
   விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com