முகப்புகோலிவுட்

விஜய் பட இயக்குநர் 'பாபு சிவன்' காலமானார் - சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..!

  | September 17, 2020 11:05 IST
Babu Shivan

துனுக்குகள்

 • பிரபல இயக்குநர் தரணி அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றி அதன் பிறகு
 • இந்நிலையில் அடுத்த ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி பெரிய அளவில்
 • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி
பிரபல இயக்குநர் தரணி அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றி அதன் பிறகு இயக்குநராக களமிறங்கி வேட்டைக்காரன் என்ற வெற்றிப்படத்தை கொடுத்தவர் தான் இயக்குநர் பாபு சிவன். சிறு வயதில் சினிமா மீது கொண்ட ஆசையின் காரணமாக இவர் பிரபல இயக்குநர் தரணி அவர்களிடம் உதவி இயக்குநராக இணைந்து பணியாற்றி வந்தார். இந்நிலையில் 2008ம் ஆண்டு வெளியான தளபதியின் குருவி படத்தின் மூலம் இவர் எழுத்தாளராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் அடுத்த ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்ற வேட்டைக்காரன் படத்தின் மூலம் இவர் ஒரு இயக்குநராக தமிழ் சினிமாவில் களமிறங்கினர். ஆனால் இவர் இயக்கிய முதல் மற்றும் கடைசி திரைப்படம் வேட்டைக்காரன் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு விஜயின் பைரவா படத்திலும் இவர் பணியாற்றினார். இறுதியாக நடிகை தேவயானி நடிப்பில் ஒளிபரப்பாகி வந்த 'ராசாத்தி' என்ற சின்னத்திரை நாடகத்தை இயக்கி வந்தார். தற்போது கல்லீரல் பிரச்சனையால் வாடி வந்த பாபுசிவன் நேற்று ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி காலமானார். அவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி திரைப்படம் ஒன்றை கொடுத்த இயக்குநர் 55 வயதில் மரணமடைந்தது பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com