முகப்புகோலிவுட்

‘சும்மா கிழி’ பாடலுக்காக லெஜண்ட்-க்கு நன்றி - அனிருத்

  | November 27, 2019 11:53 IST
Darbar

துனுக்குகள்

  • தர்பார் திரைப்படம் ஜனவரி 9-ஆம் தேதி வெளியாக்வுள்ளது.
  • இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
  • இப்படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் ’சும்மா கிழி’ இன்று வெளியாகிறது.
தர்பார் திரைப்படத்தில் ரஜினியின் இண்ட்ரோ பாடலை பாடிக் கொடுத்ததற்காக மூத்த பாடகர் எஸ்.பி.பி க்கு அனிருத் நன்றி தெறிவித்துள்ளார்.

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 2020 ஜனவரி 9-ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் தர்பார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தில் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு, ஸ்ரீமன், தம்பி ராமய்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

லைக்கா புரோடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். இப்படத்திலிருந்து ‘சும்மா கிழி' எனும் ரஜினியின் இண்ட்ரோ பாடல் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில், “சகாப்தங்கள் பல கடக்கலாம். ஆனால், இந்த லெஜண்டின் ஆற்றல் பிரமிக்கவைக்கிறது. சும்மா கிழி பாடலுக்காக டியர் எஸ்.பி.பி சாருக்கு நன்றி.. இப்பாடல் 5 மணிக்கு வெளியாகும்” என பதிவிட்டுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்