முகப்புகோலிவுட்

'ட்விட்டர் தளத்தில் ஒரு மில்லியன் Followers' - நன்றி சொல்லி ட்வீட் போட்ட மக்கள் செல்வன்..!!

  | July 17, 2020 07:21 IST
1 Million Followers In Twitter

துனுக்குகள்

 • தற்கால தமிழ் சினிமா உலகின் தவிர்க்கமுடியாத நடிகராக மாறிவிட்டார்
 • 10-க்கும் மேற்பட்ட படங்களில் பல மொழிகளில் நடித்து அசத்தி வருகின்றார்
 • தற்போது ஒரு மில்லியன் நபர்கள் பின்தொடர்கின்றன
தற்கால தமிழ் சினிமா உலகின் தவிர்க்கமுடியாத நடிகராக மாறிவிட்டார் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி. ஹீரோ, வில்லன், குணச்சித்திரம், நகைச்சுவை என்று எந்த கேரக்டர் கொடுத்தாலும் இந்த நடிகரின் நடிப்பு அனல் பறக்கிறது. ஆரமப காலத்தில் சினிமா துறையில் தான் கண்ட பல சறுக்கல்களுக்கு வட்டியும் முதலுமாக வெற்றிக்கு மேல் வெற்றிகளை குவித்து வருகின்றார். அண்மைக்காலமாக தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் இவர் நடித்து வருகின்றார்.  

இந்த 2020ம் ஆண்டு மட்டும் மாஸ்டர், மாமனிதன், கடைசி விவசாயி, துக்ளக் தர்பார், புஷ்பா என்று 10-க்கும் மேற்பட்ட படங்களில் பல மொழிகளில் நடித்து அசத்தி வருகின்றார். இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ளது 'க/பெ. ரணசிங்கம்' என்ற திரைப்படம்.

தனது சமூகவலைத்தளத்தில் அவ்வப்போது ஆக்டிவாக இருக்கும் மக்கள் செல்வனை ட்விட்டர் தளத்தில் தற்போது ஒரு மில்லியன் நபர்கள் பின்தொடர்கின்றன. இதனை சுட்டிக்காட்டி #MillionVSPian என்று குறிப்பிட்டு அனைவருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் விஜய்சேதுபதி அவர்கள்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com