முகப்புகோலிவுட்

'உங்கள் அளவற்ற அன்பிற்கு நன்றி' - ட்விட்டர் தளத்தில் 6 மில்லியன் Followers பெற்ற 'அயலான்'..!!

  | July 13, 2020 09:35 IST
6 Million Twitter Followers

துனுக்குகள்

  • கடந்த 2019ம் ஆண்டு சிவகார்த்திகேயனுக்கு சிறந்த ஆண்டாக அமைந்தது
  • இந்நிலையில் ட்விட்டர் தளத்தில் தன்னை 6 மில்லியன் பேர் பின்தொடர்வதை
  • எனது சகோதர சகோதரிகள் என்னிடம் காட்டும் அளவற்ற அன்பிற்கு
மிமிக்கிரி ஆர்டிஸ்டாக களமிறங்கி, இன்று 'அடுத்த இளைய தளபதி' என்று பல விமர்சகர்கள் கூரும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் என்று இவருக்கு அனைத்து வயதிலும் ரசிகர்கள் அதிகம். கடந்த சில காலமாகவே தான் நடிக்கும் கதைகளில் மிகுந்த கவனம் செலுத்தி நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். 

கடந்த 2019ம் ஆண்டு சிவகார்த்திகேயனுக்கு சிறந்த ஆண்டாக அமைந்தது, மிஸ்டர். லோக்கல், நம்ம வீட்டு பிள்ளை, ஹீரோ என்று மூன்று படங்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது அவருடைய அடுத்த படத்திற்க்கான அப்டேட் வந்துள்ளது. 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் ஆர்.டி ராஜா அவர்கள் தயாரிக்க, ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் சிவர்கார்த்திகேயன் நடிக்கும் 'அயலான்' படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. 'அயலான்' 'Destination Earth' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் 'சயின்ஸ் பிக்ஷன்' படமாக உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இந்நிலையில் ட்விட்டர் தளத்தில் தன்னை 6 மில்லியன் பேர் பின்தொடர்வதை குறிப்பிட்டு அனைவருக்கும் தனது நன்றிகளை பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில் "ட்விட்டர் தளத்தில் என்னை பின்தொடரும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. எனது சகோதர சகோதரிகள் என்னிடம் காட்டும் அளவற்ற அன்பிற்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com