முகப்புகோலிவுட்

அருள்நிதி நடிப்பில் 'டைரி' - டைட்டிலை வெளியிட்ட வாழ்த்திய வெற்றி மாறன்..!!

  | July 21, 2020 13:29 IST
Arulnithi 14 Title

துனுக்குகள்

 • அருள்நிதியின் 14-வது திரைப்படம் குறித்த அப்டேட் தற்போது
 • ‘குற்றம்23' புகழ் இயக்குநர் அறிவழகன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக
 • 'டைரி' என்ற இந்த தலைப்பை ‘அசுரன்' பட இயக்குநர் வெற்றிமாறன்
மிகப்பெரிய அரசியல் குடும்பத்தில் பிறந்தபோதும் சினிமா என்ற பாதையை தேர்ந்தெடுத்த நடிகர்களில் அருள்நிதி அவர்களும் ஒருவர். சென்னை லயோலா கல்லூரியில் பட்டம் பெற்ற இவர் 2010ம் ஆண்டு வெளியான 'வம்சம்' என்ற படத்தின் மூலம் திரையுலகில் களமிறங்கினர். இதுவரை 11 படங்கள் மட்டுமே நடித்துள்ளார் என்றபோதும் இவரின் நடிப்பிற்கு தனி ரசிகர் கூட்டம் உண்டு. 

டிமான்டி காலனி, நாலு பேரும் நல்லா இருந்த ஊரும், இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்டபடங்களில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர் அருள்நிதி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அருள்நிதியின் 14-வது திரைப்படம் குறித்த அப்டேட் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தை இன்னிசை பாண்டியன் இயக்குகிறார். விக்ரமின் ‘கோப்ரா' படத்திற்கு வசனகர்த்தாவான அவர், இயக்குநர் அஜய் ஞானமுத்து மற்றும் ‘குற்றம்23' புகழ் இயக்குநர் அறிவழகன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.
அருள்நிதி14 திரைப்படத்தை Five Star Creations பேனரின் கீழ் கதிரேசன் தயாரிக்கிறார். மேலும் இப்படத்துக்கு ரான் ஈதன் யோஹன் இசையமைக்கிறார். இவர் மாயா, கேம் ஓவர், இறவாக்காலம் போன்ற படங்களுக்கு இசையமைத்து புகழ் பெற்றவர். அருள்நிதி14 படத்தின் தலைப்பு அருள்நிதியின் பிறந்தநாளான இன்று 
 வெளியிடப்பட்டுள்ளது. 'டைரி' என்ற இந்த தலைப்பை ‘அசுரன்' பட இயக்குநர் வெற்றிமாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com