முகப்புகோலிவுட்

‘தரம் மாறா சிங்கிள்’ பாடல் வீடியோ வெளியானது..!

  | January 20, 2020 11:47 IST
Darbar

துனுக்குகள்

  • தர்பார் திரைப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார்.
  • இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
  • இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
தர்பார் படத்திலிருந்து ‘தரம் மாறா சிங்கிள்' பாடலின் வீடியோ வெளியாகி வைரலாகிவருகிறது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ‘தர்பார்'. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். ரஜினிகாந்த், ஆதித்யா அருணாசலம் என்ற பெயரில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு, ஸ்ரீமன், தம்பி ராமய்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திலிருந்து ‘சும்மா கிழி' வீடியோ பாடல் சமீபத்தில் வெளியானது. அந்த வீடியோ தற்போது யூடியூபில் 22 லட்சத்திற்கும் மேலான பார்வைகளைக் கடந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்திலிருந்து ‘தரம் மாறா சிங்கிள்' வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. ரஜினி - நயன்தாராவின் காம்பினேஷனில் ரொமான்ஸ் காட்சிகள், இடையில் யோகி பாபு மற்றும் நிவேதா தாமஸ் உடனான சின்ன சின்ன காமெடிகளுடன் உருவாகியுள்ள இந்த பாடலின் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகிவருகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்