முகப்புகோலிவுட்

ட்விட்டரில் இணைந்த நடிகர் இளவரசு; ஆனா அது அவர் இல்லை- சேரன் ட்வீட்..

  | July 31, 2020 01:00 IST
Cheran

"அவர் அனுமதியின்றி அவர் பெயரில் துவங்கப்பட்டிருக்கும் இந்த அக்கவுண்டை உடனடியாக நீக்கவும்"

கோலிவுட் திரையுலகில் பன்முக நடிகர்களில் ஒருவர் இளவரசு. பல தசாப்தங்களாக சினிமா துறையில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திவரும் மூத்த நடிகர் சமீபத்தில் தனது ட்விட்டர் கணக்கைத் திறந்துள்ளார். அவர் தனது வாழ்க்கையில் பல முன்னணி நடிகர்களுடன் திரையைப் பகிர்ந்துள்ளார்.

ட்விட்டர் கணக்கை திறந்த பின்னர் தனது முதல் ட்வீட்டை  பதிவிட்டுள்ளார். கோலிவுட் பிரபலங்களும் அவரது நெருங்கிய நண்பர்களும் அவரை வரவேற்றுள்ளனர். நித்தின் சத்யா, மனோபாலா, சேரன் ஆகியோரும் வரவேற்றனர்.

ஆனால், அடுத்த நாளே இயக்குநர்-நடிகர் சேரன், இந்த ட்விட்டர் கணக்கு அவருடையது அல்ல என்று உறுதி செய்துள்ளார். சேரன் தனது ட்வீட்டில் “நண்பரே... நான் திரு இளவரசு அவர்களிடம் விசாரித்ததில் இந்த டுவிட்டர் கணக்கு அவருடையது அல்ல என தெரிவித்தார்.. ஆகவே தயவுகூர்ந்து அவர் அனுமதியின்றி அவர் பெயரில் துவங்கப்பட்டிருக்கும் இந்த அக்கவுண்டை உடனடியாக நீக்கவும்…” என்று கூறியுள்ளார்.

இளவராசு பல குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் மற்றும் அவரது நகைச்சுவை உணர்வால் ரசிகர்களை மகிழ்வித்துள்ளார். ஒரு சில படங்களில் வில்லன் வேடங்களிலும் நடித்துள்ளார். வடிவேலுவின் 23-ஆம் புலிகேசியில் மங்குனிபாண்டியன், களவணியில் ராமசாமி, பகவதியில் சிங்கமுத்து, லிங்காவில் சாமி பிள்ளை, கனாவில் தங்கராசு, என்.ஜி.கே.யில் எம்.எல்.ஏ என அவரது கதாப்பாத்திரங்களில் சில மிகவும் குறிப்பிடத்தக்கவை.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com