முகப்புகோலிவுட்

"அதுவும் முதல் படத்திலேயே" - "காதல் சடுகுடு" பாடல் குறித்து மனம் திறந்த மாதவன்

  | April 16, 2020 08:25 IST
Alaipayudhey

துனுக்குகள்

 • மணிரத்னம் இயகத்தில் 2000-ல் வெளியான ‘ அலைபாயுதே'
 • அதன் பிறகு மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் அவர் மாதவனை அழைத்தார்
 • இன்னமும் அந்த பாடலை நினைத்தால் வியர்வை வருகின்றது
மணிரத்னம் இயகத்தில் 2000-ல் வெளியான ‘ அலைபாயுதே' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் மாதவன். முன்னதாக 'இருவர்' படத்திற்காக மாதவனை ஆடிஷன் செய்ய அழைத்த மணிரத்தினம், உனது கண்கள் இளமையாக இருக்கின்றது இந்த வேடத்திற்கு நீ பொருத்தமாட்டாய் என்று கூறி அனுப்பினார். 

அதன் பிறகு மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் அவர் மாதவனை அழைத்தார், அலைபாயுதே என்ற படத்தில் நடிக்க வைத்தார். ஏப்ரல் 14-ஆம் தேதி 2000ம் ஆண்டு அந்த படம் வெளியானது. கடந்த ஏப்ரல் 14 2020ம் ஆண்டுடன் அலைபாயுதே வெளியாகி 20 ஆண்டுகளை நிறைவுசெய்தது. 20-ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த காதல் திரைப்படங்களில் ஒன்றான இந்த சூப்பர்ஹிட் படத்தை ரசிகர்கள் கடந்த ஏப்ரல் 14 அன்று சமூக வலைதளங்களில் கொண்டாடித் தீர்த்தனர்.

அதை மேற்கோள்கட்டி 20 ஆண்டுகள் கடந்தும் இந்த படத்தை மக்கள் ரசிப்பது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது என்று குறிப்பிட்டார். இந்நிலையில் அந்த படத்தில் வரும் "காதல் சடுகுடு" என்ற பாடலை  ஒருவர் செய்த டீவீட்டுக்கு பதில் அளித்துள்ளார் மாதவன். 
"இன்னமும் அந்த பாடலை நினைத்தால் வியர்வை வருகின்றது, காரணம் அந்த பாடலில் எல்லா வரிகளையும் நான் ரிவெர்ஸில் பாட வேண்டும், அது மட்டும் இல்லாமல் எனது முக பாவனங்களும் அவ்வாறே அமைய வேண்டும்", எனது முதல் படத்திலேயே இவ்வளவு கடினமாக உழைத்து மறக்கமுடியாத அனுபவம் என்று கூறினார்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com