முகப்புகோலிவுட்

‘வாரணம் ஆயிரம்’ சூர்யாவைப் பின்பற்றிய விஷ்ணு விஷால் - வைரலாகும் 6 பேக்ஸ் வீடியோ..!

  | January 25, 2020 12:22 IST
Vishnu Vishal

துனுக்குகள்

 • விஷ்ணு விஷாலுக்கு அடுத்ததாக எஃப்.ஐ.ஆர் திரைப்படம் வெளியாகவுள்ளது.
 • மேலும் ஜகஜால கில்லாடி திரைப்படத்தில் நடித்துவருகிறார்.
 • அவர் தனது 6 பேக்ஸ் வொர்க் அவுட் வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
விஷ்ணு விஷால் வெளியிட்ட இணையத்தில் வெளியிட்ட 6 பேக்ஸ் வொர்க் அவுட் விடியோ வைரலாகிவருகிறது.

நடிகர் விஷ்ணு விஷால் சுசீந்திரன் இயக்கத்தில் ‘வெண்ணிலா கபடிக்குழு' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். அதையடுத்து முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து பலே பாண்டியா, துரோகி, குள்ளநரிக் கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்ச்சசன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

அவர் தற்போது ஜகஜால கில்லாடி மற்றும் எஃப்.ஐ.ஆர் என இரண்டு படங்களில் நடித்துவருகிறார். இந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
அவர் சமீபத்தில், தனது சிக்ஸ் பேக்ஸ் புகைப்படத்துடன், ஒரு நீண்ட கடித்தத்தை ரசிகர்களுக்கு எழுதி இணையத்தில் வெளியிட்டார். அதில் அவர் ஷூட்டிங்கின் போது தனக்கு ஏற்பட்ட கடுமையான காயம் மற்றும் தன் சொந்த வாழ்க்கையில் நடந்த சில மனக்கசப்பான சம்பவங்கள், அதனால் ஏற்பட்ட உடல்நிலை மாற்றம், மனநிலை மாற்றம், மேலும் குடிப் பழக்கத்துக்கு ஆளானது உள்ளிட்ட அனைத்தையும் பகிர்ந்துகொண்டார். அந்த பிரச்சணைகளிலிருந்து எப்படி மீண்டு வந்தார் என கூறியிருந்தார். "வாரணம் ஆயிரம்” திரைப்படத்தில் சூர்யாவின் முறையை பின்பற்றியதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
தற்போது, அதையே ஒரு வீடியோவாக பதிவு செய்து தனது சொந்த ப்ரொடக்ஷன் கம்பெனியின் இணையதள அக்கவுண்டில் வெளியிட்டுள்ளார். பார்வையாளர்களுக்கு ஊக்கமளிக்கக்கூடிய வகையில் இருக்கும் “The ABS I Built In My HEAD - Vishnu Vishal on fighting his inner demons” இந்த வீடியோ, தற்போது செம வைரலாகிவருகிறது.

விஷ்ணு தனது எஃப்.ஆர் படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் 2-வது லுக் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதுத்ததாக விரைவில் இப்படத்தின் டீஸர் வெளியாகும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com