முகப்புகோலிவுட்

'சென்னை to மும்பை' - வைரலாகும் ஹன்சிகாவின் ரிமோட் போட்டோஷூட்..!!

  | June 27, 2020 07:59 IST
Remote Shoot

துனுக்குகள்

 • 2011ம் ஆண்டு வெளியான தனுஷின் 'மயக்கம் என்ன' என்ற திரைப்படத்தின் மூலம்
 • இந்த ஊரடங்கு காலத்தில் சுந்தர் ரிமோட் போட்டோஷூட்களை எடுத்து
 • தற்போது அவர் பிரபல நடிகை ஹன்சிகாவை வைத்து இந்த ரிமோட் போட்டோஷூட்டை
2011ம் ஆண்டு வெளியான தனுஷின் 'மயக்கம் என்ன' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகர் தான் சுந்தர் ராமு. இவர் ஒரு நடிகர் மட்டும் இல்லாமல் சிறந்த புகைப்பட கலைஞராகவும் திகழ்பவர். பெங்களூருவில் தனது பள்ளிப்படிப்பை முடித்த இவர் டெல்லி சென்று அங்கு National School of Drama என்ற நிறுவனத்தில் சேர்ந்தனர். ஆனால் ஹிந்தியில் மொழி கற்பதில் ஏற்பட்ட சிரமத்தால் அவர் சென்னை லயோலா கல்லூரியில் Vis.Com படிப்பில் இணைத்தார். 

அதன் பிறகு தனுஷின் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான மயக்கம் என்ன, உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான இது கதிர்வேலன் காதல், விஷாலின் நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இறுதியாக மலையாளத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான Love Action Drama என்ற படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இந்த ஊரடங்கு காலத்தில் சுந்தர் ரிமோட் போட்டோஷூட்களை எடுத்து அசத்தி வருகின்றார். சில தினங்களுக்கு முன்பு பிரபல நடிகை கேத்தரின் தெரசாவை மாடலாக வைத்து இவர் போட்டோஷூட் எடுத்து குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் பிரபல நடிகை ஹன்சிகாவை வைத்து இந்த ரிமோட் போட்டோஷூட்டை எடுத்துள்ளார். சென்னையில் இருந்துகொண்டு மும்பையில் உள்ள அவரை போட்டோ எடுத்து அசத்தியுள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com