முகப்புகோலிவுட்

சீயான் விக்ரமின் "தும்பி துள்ளல்" - அசத்தலான 6 மில்லியன் வியூஸ்..!

  | August 06, 2020 11:18 IST
Thumbi Thullal

துனுக்குகள்

 • சியான் விக்ரம் 7 மாறுபட்ட வேடங்களில் தோற்றமளிக்கும் போஸ்டர்
 • சமீபகாலமாக, இப்படத்தின் அப்டேட் கேட்டு கேட்டு ஏமாற்றதில் இருந்த
 • தற்போது இந்த பாடல் 6 மில்லியன் வியூஸ்களை பெற்று அசத்தியுள்ளது
டிமாண்டி காலணி, இமைக்கா நொடிகள் ஆகிய திரைப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘சியான்' விக்ரம்' நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகிவரும் திரைப்படம் ‘கோப்ரா'. இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF பட நடிகை ஶ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் மற்றும் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்துக்கு ‘இசைப்புயல்' ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.
 
சியான் விக்ரம் 7 மாறுபட்ட வேடங்களில் தோற்றமளிக்கும் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி செம வைரலானது. இரண்டு மாதங்களுக்கு முன் இப்படத்தின் கடைசி படப்பிடிப்பு ஷெடுலை முடிக்க ரஷ்யா சென்ற படக்குழு, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பாதியிலேயே திரும்பி வந்தது. இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக் நிறுத்தப்ட்டது.

சமீபகாலமாக, இப்படத்தின் அப்டேட் கேட்டு கேட்டு ஏமாற்றதில் இருந்த ரசிகர்களுக்கு, சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான மகிழ்ச்சியான செய்தியை வழங்கினார். அவர் குறிப்பிட்டதது போலவே கோப்ரா திரைப்படத்தின் முதல் பாடலாக ‘தும்பி துள்ளல்' கடந்த ஜூன் மாத இறுதியில் வெளியானது. தற்போது இந்த பாடல் 6 மில்லியன் வியூஸ்களை பெற்று அசத்தியுள்ளது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com