முகப்புகோலிவுட்

அம்ரிதா ஐயரின் 'லிப்ட்' - சிறப்பான அப்டேட் சொன்ன நாயகன் கவின்..!

  | July 30, 2020 11:51 IST
Lift

துனுக்குகள்

  • சின்ன திரை நாடகங்களில் நடிக்கும்போது பெண்கள் மத்தியில் பெரிய அளவில்
  • இந்நிலையில் கொரோனா காரணமாக படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள்
  • விரைவில் இந்த படம் குறித்த பல அப்டேட் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
சின்ன திரை நாடகங்களில் நடிக்கும்போது பெண்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்புடன் வலம்வந்தவர் தான் நடிகர் கவின். அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அவருக்கான விசிறிகளின் அளவு அதிகரித்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் இலங்கை தமிழச்சி லாஸ்லியா மீது காதல் கொண்டார். பிக் பாசில் இவர்களின் காதல் கதை ஒரு தனிக்கதை. 

அதற்கு பின் தற்போது லாஸ்லியா கதாநாயகியாக மாற, ஏற்கனவே 'நட்புன்னா என்னனு தெரியுமா' என்ற படத்தில் ஹீரோவாக வலம்வந்த கவின் தற்போது மீண்டும் ஹீரோவாக களமிறங்குகிறார். இந்த படத்தில் கவினுடன் கரம் கோர்க்கிறார் பிகில் பட நடிகை அம்ரிதா ஐயர். சில தினங்களுக்கு முன்பு இந்த படத்திற்கான போஸ்டர் ஒன்று வெளியானது. 'லிஃப்ட்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் டீஸர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் கொரோனா காரணமாக படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் தடைப்பட்டிருந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு வழங்கப்பட தளர்வின் காரணமாக மீண்டும் Post Production பணிகள் தொடங்கிய நிலையில் "லிப்ட்" திரைப்படத்திற்கான தனது டப்பிங் பணிகளை நாயகன் கவின் நிறைவு செய்துள்ளார். விரைவில் இந்த படம் குறித்த அப்டேட் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com