முகப்புகோலிவுட்

'ஒரு தாயின் பயணம்..!!' - அசத்தலாக வெளியானது பெண்குயின் ட்ரைலர்.

  | June 11, 2020 13:37 IST
Penguin Trailer

துனுக்குகள்

 • 'மகாநடி', வெற்றிக்கு பிறகு கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்
 • தற்போது இந்த ட்ரைலரை மூன்று நாயகர்கள் வெளியிட்டுள்ளனர்
 • மூத்த நடிகர் மோகன்லால் மற்றும் தெலுங்கில் நடிகர்
'மகாநடி', வெற்றிக்கு பிறகு கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். மேலும் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களில் அவர் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவான 'பெண்குயின்' என்ற படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமானார். 

OTT தளத்தில் வெளியாகும் இந்த படத்தின் டீசரை த்ரிஷா உள்ளிட்ட நான்கு நாயகிகள் கடந்த 8ம் தேதி வெளியிட்டனர். தற்போது இந்த வீடியோ youtube தளத்தில் மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங் நம்பர் ஒன்றில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் ஏற்கனவே அறிவித்தது போல இன்று இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. டீசரை நான்கு நாயகிகள் வெளியிட்டது போல தற்போது இந்த ட்ரைலரை மூன்று நாயகர்கள் வெளியிட்டுள்ளனர். தமிழில் தனுஷ், மலையாளத்தில் மூத்த நடிகர் மோகன்லால் மற்றும் தெலுங்கில் நடிகர் நாநீ ஆகியோர் இந்த ட்ரைலரை வெளியிட்டுள்ளனர்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com