முகப்புகோலிவுட்

"சாண்டா நடிப்பில் பிஸ்கோத்" - ட்ரைலர் குறித்து அசத்தல் அப்டேட் கொடுத்த படக்குழு..!!

  | August 01, 2020 08:03 IST
Biskoth Movie

துனுக்குகள்

  • சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த தொடங்கி தளபதி, தல என்று தமிழ் சினிமாவின்
  • இந்நிலையில், அவரது ‘பிஸ்கோத்' திரைப்படமும் இறுதிக்கட்ட பணியில் உள்ளது
  • தற்போது அனைவரும் எதிர்பார்த்த இப்படத்தின் ட்ரைலர் வரும்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த தொடங்கி தளபதி, தல என்று தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ள ஒரு நடிகர் என்றால் அது சந்தானம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. சின்னத்திரையில் இருந்து புறப்பட்டு வெள்ளித்திரையில் ஜொலிக்கும் ஒரு நட்சத்திரம். சூர்யா, மாதவன், சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி, விஷால், ஆர்யா என்று இவர் ஜோடி சேர்ந்து காமெடியில் கலக்காத நாயகர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. 

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு நாயகனாக களமிறங்கி அசத்தி வரும் சந்தானம், இந்த 2020-ஆம் ஆண்டை ‘டகால்டி' எனும் நகைச்சுவை பொழுதுபோக்கு திரைப்படத்துடன் வெற்றிகரமாக தொடங்கினார். மேலும் அவரது சர்வர் சுந்தரம், ஓடி ஓடி உழைக்கணும் ஆகிய படங்கள் அடுத்தடுத்த வெளியீட்டிற்கு தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அவரது ‘பிஸ்கோத்' திரைப்படமும் இறுதிக்கட்ட பணியில் உள்ளது. இந்த மகிழ்ச்சியான தகவலை இப்படத்தின் இயக்குநர் ஆர். கண்ணன் அண்மையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்துடன் பதிவிட்டார். அதன் பிறகு பல அப்டேட்கள் வெளியான நிலையில் தற்போது அனைவரும் எதிர்பார்த்த இப்படத்தின் ட்ரைலர் வரும் 3ம் தேதி மாலை வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com