முகப்புகோலிவுட்

‘தர்பார்’ ஆடியோ லான்ச் அறிவிப்பு..!

  | December 04, 2019 16:57 IST
Darbar

துனுக்குகள்

  • தர்பார் திரைப்படம் ஜனவரி 9-ஆம் தேதி வெளியாக்வுள்ளது.
  • இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
  • இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
ரஜினியின் தர்பார் ஆடியோ லான்ச் குறித்து அப்படக்கூழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ‘தர்பார்'. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். ரஜினிகாந்த், ஆதித்யா அருணாசலம் என்ற பெயரில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு, ஸ்ரீமன், தம்பி ராமய்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

லைக்கா புரோடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். இப்படத்லிருந்து எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடிய ரஜினியின் அறிமுகப் பாடலான ‘சும்மா கிழி' முதல் சிங்கிள் ட்ராக்காக சமீபத்தில் வெளியாகி ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
2020 பொங்கலை முன்னிட்டு, ஜனவரி 9-ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் ஆடியோ வெளியீடு குறித்து  அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை லைக்கா நிறுவனம் அதன் ட்விட்டர் பக்கத்தில் “தலைவரின் தர்பார் திரைப்பட பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா, வருகிற டிசம்பர் 7-ஆம் தேதி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது” என பதிவிட்டுள்ளது. இந்தச் செய்தியை ரஜினி ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்