முகப்புகோலிவுட்

இனி விளம்பரம் இல்லை, திரைப்படம் தான்.! கதாநாயகனான 'லெஜெண்ட்' சரவணன்..!

  | December 02, 2019 11:28 IST
Legend Saravanan

துனுக்குகள்

 • ‘Legend’ சரவணன் தயாரிக்கும் முதல் திரைப்படம் இது.
 • இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைகிறார்.
 • ஏவிஎம் சரவணன், எஸ்.பி முத்துராமன் இதன் படப்பிடிப்பை துவங்கி வைத்தனர்.
லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் புதிய திரைப்படத்தை தயாரித்து கதாநாயகனாக நடிக்கிறார்.

நியூ சரவணா ஸ்டோர்ஸ் பிரம்மாண்டமாய் வழங்கும் அறிமுக நாயகன் லெஜண்ட் சரவணன் தயாரித்து நடிக்கும் திரைப்படம் ப்ரொடக்ஷன் நம்பர்-1. இப்படத்தில் கீத்திகா திவாரி நாயகியாக அறிமுகமாகிறார்.

இப்படத்தை ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகிய இரண்டு இயக்குனர்கள் கதை எழுதி இயக்கவுள்ளனர். இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். பிரம்மாண்டமாக தயாரிக்கப்படும் இப்படத்தில் நடிகர் பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், மயில்சாமி, லதா, கோவை சரளா, தேவி மகேஷ், மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக பிரபல நடிகை நடிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய எஸ்.எஸ். மூர்த்தி அரங்கம் அமைக்க, ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். மேலும், இப்படத்துக்கு பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுத, முதல் பாடலை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார்.

ஏவிஎம் சரவணன் குத்துவிளக்கு ஏற்றி, எஸ்.பி முத்துராமன் கிளாப் அடித்து, ஏவிஎம் ஸ்டூடியோவில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கப்பட்டது.
 
‘புரோடக்சன் நம்பர்-1' படப்பிடிப்பு சென்னை பொள்ளாச்சி இமயமலை மற்றும் வெளிநாடுகளிலும் நடைபெற உள்ளது. முதல் படத்திலேயே அனைத்து துறைகளிலும் முன்னணியில் இருப்பவர்களை ஒப்பந்தம் செய்துள்ளார் இப்படத்தின் கதாநாயகன் மற்றும் தயாரிப்பாளருமான சரவணன். தன் கடைக்கான விளம்பரத்தையே படு பிரம்மாண்டமாக தயாரிக்கும் அவர், அவரின் சொந்த திரைப்படத்துக்கு இது கூட செய்யவில்லை என்றால் எப்படி..!

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com