முகப்புகோலிவுட்

"இளைஞர்களுக்கு வழிகாட்டுகிறது ஜே.கே.." - இயக்குநர் சேரன் பெருமிதம்..!!

  | July 05, 2020 09:01 IST
Jk Ennum Nanbanin Vaalkai

துனுக்குகள்

 • 12 படங்கள் மட்டுமே இயக்கியுள்ளார் என்றபோதும், தமிழ் சினிமாவின் வரலாற்றில்
 • பல ஆண்டுகளுக்கு முன்பே சிறய பட்ஜெட் படங்களை எடுக்கும் தயாரிப்பாளர்கள்
 • சேரன் எழுதி, இயக்கிய இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், ஷர்வானந், சந்தானம்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் இயக்குநரும், நடிகருமான திரு. சேரன் புகழ் பெற்றார் என்று சிலர் நினைக்கும் நேரத்தில் கண்முன் வந்து செல்கின்றது பாரதி கண்ணம்மா, ஆட்டோகிராப், வெற்றிக்கொடி கட்டு போன்ற படங்கள். 12 படங்கள் மட்டுமே இயக்கியுள்ளார் என்றபோதும், தமிழ் சினிமாவின் வரலாற்றில் நிச்சயம் இவருக்கும் ஒரு தனி இடம் உண்டு. தமிழ் சினிமாவில் 70 மட்டும் 80-களுக்கு பிறகு நல்ல குடும்பம் சார்ந்த கதைகளை கொடுத்ததில் அவருக்கு இணை அவரே. தவமாய் தவமிருந்த பாண்டவர் பூமி அதற்கு சாட்சி. 

பல ஆண்டுகளுக்கு முன்பே சிறய பட்ஜெட் படங்களை எடுக்கும் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் C2H அதாவது Cinema to Home என்ற ஒரு விஷயத்தினை நடைமுறை படுத்தியதால் பெரிய பங்கு சேரன் அவர்களை சாரும். அந்த வகையில் C2H தளத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளியானது ஜே.கே என்னும் நண்பனின் வாழ்க்கை என்ற திரைப்படம். 

சேரன் எழுதி, இயக்கிய இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், ஷர்வானந், சந்தானம் மற்றும் நித்யா மேனன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்நிலையில் 5 ஆண்டுகள் கடந்தும் தற்போதும் இந்த படம் பெரிய அளவில் பேசப்படுகிறது. இது குறித்து பேசியுள்ள சேரன் அவர்கள் "மீண்டும் இளைஞர்களிடம் சூடுபிடிக்கிறது ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை.. இந்த காலக்கட்டத்தில் அடுத்து என்ன செய்யலாம் என யோசிக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டுகிறது ஜேகே... பாருங்கள்.. பகிருங்கள்." என்று கூறியுள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com