முகப்புகோலிவுட்

'இதுவும் கடந்து போகும்..!!' - நெகிழ்ச்சியான காணொளியை வெளியிட்ட ராய் லட்சுமி

  | May 29, 2020 15:37 IST
Raai Lakshmi

துனுக்குகள்

 • பிரபல நடிகை ராய் லட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழவைக்கும்
 • கடவுளே இந்த உலகத்தை காப்பாற்றுங்கள்..! இதையெல்லாம் இனி எங்களால்
 • வலுவாக இருங்கள், கடவுள் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பார்
பொதுமுடக்கம் காரணமாக கடந்த மே 1-ம் தேதியில் இருந்து 91 லட்சம் வெளி மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட வெளி மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். சிலர் நடைப்பயணமாக செல்கின்றனர். அவ்வாறு செல்லும் வழியில் உயிரிழப்பு சம்பவங்களும் ஏற்படுகின்றன. பசியால் தொழிலாளர்கள் வாடுவது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின்றன. 

இந்த நிலையில், பிரபல நடிகை ராய் லட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழவைக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். "இயற்கை கடும் கோபத்தில் இருக்கிறது என்றும், நமக்கு போதுமான படத்தை அது நடத்திவிட்டது" என்றும் அவர் அந்த பதிவில் கூறியுள்ளார்.

மேலும் அவர் வெளியிட்ட அந்த பதிவில் "கடவுளே இந்த உலகத்தை காப்பாற்றுங்கள்..! இதையெல்லாம் இனி எங்களால் பார்க்க முடியாது..! உங்களால் முடிந்தவரை மக்களுக்கு உதவவும், உயிரைக் காப்பாற்றவும் அனைவருக்கும் வேண்டுகோள் விடுங்கள். கடினமான நேரங்கள் விரைவில் கடந்து செல்லும். நல்ல நாட்கள் வரும் என்று நம்புகிறோம், வலுவாக இருங்கள், கடவுள் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பார்", என்று கூறியுள்ளார்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com