முகப்புகோலிவுட்

சந்தானத்தின் அதே கலக்கலான கலாயுடன் வெளியான ‘பிஸ்கோத்’ டிரெய்லர்.!

  | August 03, 2020 19:05 IST
Santhanam

இயக்குநர் ஆர்.கண்ணன், தானே எழுதி, இயக்கி, தயாரிக்கும் படம் 'பிஸ்கோத்'.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த தொடங்கி தளபதி, தல என்று தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ள ஒரு நடிகர் என்றால் அது சந்தானம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. சின்னத்திரையில் இருந்து புறப்பட்டு வெள்ளித்திரையில் ஜொலிக்கும் ஒரு நட்சத்திரம். சூர்யா, மாதவன், சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி, விஷால், ஆர்யா என்று இவர் ஜோடி சேர்ந்து காமெடியில் கலக்காத நாயகர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. 

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு நாயகனாக களமிறங்கி அசத்தி வரும் சந்தானம், இந்த 2020-ஆம் ஆண்டை ‘டகால்டி' எனும் நகைச்சுவை பொழுதுபோக்கு திரைப்படத்துடன் வெற்றிகரமாக தொடங்கினார். மேலும் அவரது சர்வர் சுந்தரம், ஓடி ஓடி உழைக்கணும் ஆகிய படங்கள் அடுத்தடுத்த வெளியீட்டிற்கு தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அவரது ‘பிஸ்கோத்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகியுள்ளது. சந்தானத்திற்கே உரிய அதே கால்யுடன் ரசிக்கும்படியான கலக்கலான காமெடியுடன் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இது சந்தானத்தின் ரசிகர்களுக்கு மகைழ்ச்சியை அளித்துள்ளது.

இயக்குநர் ஆர்.கண்ணன், தானே எழுதி, இயக்கி, தயாரிக்கும் படம் 'பிஸ்கோத்'. பிஸ்கட் கம்பெனியில் சாதாரணமாக பணியாற்றுபவன் எப்படி உயர் பதவிக்குச் செல்கிறான் என்பதே இப்படத்தின் கதையாம். இப்படத்தில் சோஸ்கார் ஜானகி, தாரா அலிஷா பெர்ரி மற்றும் சுவாதி முப்பாலா ஆகியோரும் பிஸ்கோத்தில் நடிக்கின்றனர், மேலும் சந்தனம் பல தோற்றங்களில் தோன்றியுள்ளார்.

இப்படத்தில் 'சௌகார்' ஜானகி சந்தானத்தின் பாட்டியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானிடம் உதவியாளராக இருந்து, அர்ஜுன் ரெட்டி' திரைப்படம் மூலம் பிரபலமான ரதன் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com