முகப்புகோலிவுட்

“ஒரே சூப்பர் ஸ்டார்” ரஜினிகாந்த்... தர்பார் போஸ்டரை வெளியிட்ட சல்மான் கான்..!

  | November 08, 2019 11:29 IST
Darbar

துனுக்குகள்

  • தர்பார் ரஜினிகாந்தின் 167-வது படமாகும்.
  • iப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
  • இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார்.
தர்பார் படத்தின் இந்தி மோஷன் போஸ்டரை சல்மான் கான் நேற்று வெளியிட்டார்.

லைக்கா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் ‘தர்பார்'. போஸ்ட் ப்ரொடக்ஷனில் வேலைகளில் இருக்கும் இப்படம் வரும் பொங்கலன்று ரசிகர்களுக்கு விருந்தாகவுள்ளது. இப்படத்தில், ரஜினிகாந்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படக்குழு அறிவித்தபடி, இப்படத்தின் மோஷன் போஸ்டர் கமல் ஹாசனின் பிறந்தநாளான நேற்று வெளியானது. நான்கு மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழ் மோஷன் போஸ்டரை உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்டார். தெலுங்கில் மஹேஷ் பாபுவும், மலையாளத்தில் மோஹன் லாலும் வெளியிட்டனர். அதேபோல், இந்தி மோஷன் போஸ்டரை பாலிவுட் நடிகர் சல்மான் கான் வெளியிட்டார்.
தனது ட்விட்டர் பக்கதில் இதனை ஷேர் செய்த சல்லு பாய், “வெரும் சூப்பர் ஸ்டார் அல்ல, ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வாழ்த்துக்கள்” எனக் கூறி படக்குழுவினர் அனைவரையும் டேக் செய்து, மோஷன் போஸ்டரின் link-யும் உடனிணைத்து பதிவிட்டிருந்தார். அனிருத்தின் மரண மாஸான தீம் மியூசிக்கில், தலைவரின் அட்டகாசமான ஸ்டைலிஷ் லுக்குடன் வெளியாகியுள்ளது ‘தர்பார் மோஷன் போஸ்டர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்