முகப்புகோலிவுட்

பிரதீப் இசையில் ‘சில்லுக்கருப்பட்டி' - வெளியானது ஒரிஜினல் BGM ஸ்கோர்..!

  | August 08, 2020 08:09 IST
Sillu Karuppati Movie Update

துனுக்குகள்

  • இப்படம், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த
  • பல பாராட்டுகளை பெற்ற இந்த படத்தின் இசையும் வெகுவாக பாராட்டப்பது
  • இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பிரபல நடிகை சுனைனா
கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது சூர்யாவின் 2D Entertainment வழங்கும் ‘சில்லுக்கருப்பட்டி' திரைப்படம், நகரப் பின்னணியில் நான்கு அழகான குறுங்கதைகளைப் பற்றிக் கூறும் ஆந்தாலஜி வகை திரைப்படமாகும். இத்திரைப்படத்தை ஹலிதா சமீம் எழுதி இயக்கியுள்ளார். Divine Productions சார்பில் வெங்கடேஷ் வேலினீனி இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். சமுத்திரகனி, சுனைனா, லீலா சாம்சன், சாரா அர்ஜீன், மணிகண்டன் K, நிவேதிதா மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படத்துக்கு மேயாத மான் படத்துக்கு இசையமைத்த பிரதீப் குமார் இசையமைத்துள்ளார். 

இப்படம், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான 2-வது பரிசை வென்றது குறிப்பிடத்தக்கது. அப்போது இந்த படத்தை பார்த்த இயக்குநர் பா. ரஞ்சித் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் "மிக சரியாக கோர்க்கப்பட்ட நான்கு கதைகள்.! மனிதத்தின் தேவை அன்பு !!! திரை முழுக்க கடத்தி, பார்வையாளர்களை தித்திக்க வைத்திருக்கிறது இந்த சில்லுக்கருப்பட்டி, சுவைக்க தந்த படக்குழுவினர்களுக்கு வாழ்த்துகள்” என்று பாராட்டினார். 

பல பாராட்டுகளை பெற்ற இந்த படத்தின் இசையும் வெகுவாக பாராட்டப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த படத்தின் ஒரிஜினல் பின்னணி இசை தற்போது அதிகாரப்பூர்வமாக படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பிரபல நடிகை சுனைனா.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com