முகப்புகோலிவுட்

'விரைவில் படப்பிடிப்பு தொடங்கும்..!!' - தமிழக அரசுக்கு நன்றி சொன்ன சின்னத்திரை தயாரிப்பாளர்கள்

  | May 23, 2020 13:08 IST
Serial Shooting

துனுக்குகள்

 • திரைப்படத் துறையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கடந்த வாரம் முதல்
 • சில நிபந்தனைகளுடன் சீரியல் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் படப்பிடிப்
 • பிரபல சினிமா PRO நிக்கில் முருகன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்
கொரோனா வைரஸின் விளைவாக நாடுமுழுவதும் பூட்டுதல் அறிவிக்கப்பட்டு, கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து வணிக மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளும் தடைப்பட்டு நின்றன. அதையடுத்து மெதுவாக கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன மற்றும் வணிகங்கள் முழுமையாக மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், திரைப்படத் துறையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கடந்த வாரம் முதல் அனுமதிக்கப்பட்டுள்ளன.

தற்போது, சில நிபந்தனைகளுடன் சீரியல் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க கடந்த புதன்கிழமை என்று தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வருக்கும் அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களும் தங்களது நன்றிகளை சின்னத்திரை தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரபல சினிமா PRO நிக்கில் முருகன் வெளியிட்ட  ட்விட்டர் பதிவில், பிரபல நடிகை குஷ்பூ உள்பட பல சின்னத்திரை தயாரிப்பாளர்கள் பங்கேற்ற zoom செயலி காணொளிக்காட்சி சந்திப்பில் தற்போது தமிழக அரசு சில நிபந்தனைகளுடன் சீரியல் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க அனுமதி அளித்ததற்கு நன்றி தெரிவித்தனர். மேலும் எப்போது படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com