முகப்புகோலிவுட்

'படக்குழுவும் பல சவால்களை சந்தித்து வருகிறது' - ரசிகர்களுக்கு ஜூனியர் NTR போட்ட ட்வீட்

  | May 19, 2020 08:07 IST
Rrr

துனுக்குகள்

 • இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு இந்த படத்தின் இரு நாயகர்களில் ஒருவரான
 • அவர் வெளியிட்ட அந்த பதிவில் "எல்லா வருடமும் ரசிகர்கள் காட்டும் அன்பிற்கு
 • படக்குழுவும் பல சவால்களை சந்தித்து வருவதாகவும் அதுவே
எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரன் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்'. 'RRR' திரைப்படத்தின் கதை சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் 1920-களில் இருப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. 'ஆர்.ஆர்.ஆர்' என்ற தலைப்பின் விரிவாக்கமாக தமிழில் இரத்தம், ரணம் மற்றும் ரௌத்திரம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு இந்த படத்தின் இரு நாயகர்களில் ஒருவரான ராம் சரணின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்காக சிறப்பாக ஒரு காணொளி வெளியிடப்பட்டது. இந்நிலையில் மற்றொரு நாயகனான ஜூனியர் என்.டி.ஆர் First Look போஸ்டர் நாளை வெளியாகும் என்று தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இது குறித்து நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். 

அவர் வெளியிட்ட அந்த பதிவில் "எல்லா வருடமும் ரசிகர்கள் காட்டும் அன்பிற்கு நன்றி என்றும், இந்த ஆண்டு அனைவரும் தங்களுடைய வீட்டில் பாதுகாப்புடன் இருப்பது மட்டுமே தனக்கு காட்டும் மிகப்பெரிய அன்பு என்று குறிப்பிட்டுள்ளார். அதே போல RRR படத்தின் டீஸர் மற்றும் First Look போஸ்டர் போன்றவை வெளியாக காலதாமதம் ஆவதால் பலரும் வருத்தப்படுவது எனக்கு புரிகிறது. ஆனால் இந்த இக்கட்டான சூழலில் படக்குழுவும் பல சவால்களை சந்தித்து வருவதாகவும் அதுவே தாமதத்திற்கு காரணம் என்றும்" அவர் தெரிவித்தார். ஆகையால் ரசிகர்கள் பொறுமைகாக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com