முகப்புகோலிவுட்

அஜய் பூபதி இயக்கும் 'மகா சமுத்திரம்' - அசத்தலாக களமிறங்கும் சித்தார்த்..!

  | September 18, 2020 11:09 IST
Maha Samudram

துனுக்குகள்

 • பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் அவர்களிடம் உதவியாளராக இருந்த சமயத்தில்
 • அதன் பிறகு பிரமாண்ட இயக்குநர் சங்கரின் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம்
 • ஏ.கே.என்டர்டைன்மென்ட்ஸ் நிறுவனத்தில் தயாரிப்பில் உருவாக உள்ள புதிய
பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் அவர்களிடம் உதவியாளராக இருந்த சமயத்தில் ஒரு இளைஞனுக்கு கிடைத்தது அற்புத வாய்ப்பு. பிரபல இயக்குநர் மணிரத்தினம் அவர்களின் கன்னத்தில் முத்தமிட்டாள் என்ற படத்தில் உதவி இயக்குநராக கிடைத்த அந்த வாய்ப்பின் மூலம் திரையுலக பிரவேசம் அடைந்தவர் தான் நடிகர் சித்தார்த். சிறந்த நடிப்பு மற்றும் இன்றி சினிமாவை ஆரம்ப நிலையில் இருந்து கற்றவர் சித்தார்த் என்பது முறுக்க முடியாத உண்மை. சினிமாவை தொழில்நுடப ரீதியாக கற்ற இவர் கன்னத்தில் முத்தமிட்டாள் படத்தின் மூலம் நடிகராகவும் களமிறங்கினர். 

அதன் பிறகு பிரமாண்ட இயக்குநர் சங்கரின் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமானார். ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மாற்றம் ஆங்கிலம் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக 'அருவம்' படத்தில் நடித்த இவர் இந்த ஆண்டு 3 படங்களில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஏ.கே.என்டர்டைன்மென்ட்ஸ் நிறுவனத்தில் தயாரிப்பில் உருவாக உள்ள புதிய படத்தில் சித்தார்த் நடிக்க உள்ளார். மஹா சமுத்திரம் என்று இந்த படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அஜய் பூபதி இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com