முகப்புகோலிவுட்

'நான் ரொம்பவும் லக்கி' - சமந்தாவை புகழ்ந்த நடிகை தம்மன்னா..! காரணம் என்ன தெரியுமா..?

  | April 26, 2020 11:37 IST
Hbd Samantha

துனுக்குகள்

 • அதன் பிறகு அவர் தனது முதல் பட நாயகனும் பிரபல நடிகருமான
 • வரும் 28ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாட உள்ளார்
 • மேலும் இதை வெளியிடுவது பெருமையளிக்கிறது என்றும்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் நடிகை சமந்தா. கௌதமன் வாசுதேவ் மேனனின் 'Ye Maaya Chesave' என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். இந்த படம் தான் தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற பெயரில் வெளியாகி இன்றளவும் தனி ரசிகர் பட்டாளத்துடன் வளம் வருகின்றது. அவர் தற்போது விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து ‘காத்து வாக்குல ரெண்டு காதல்', என்ற படத்தில் நடித்து வருகின்றார். பெண்களை மையமாக வைத்து அஸ்வின் சரவணன் இயக்கவுள்ள படத்தில் பிரசாந்த்துக்கு ஜோடியாகவும் மற்றும் 'ஃபேமிலி மேன் 2' என்ற வலைத் தொடரிலும் நடிக்கிறார்.

சமந்தா மற்றும் நடிகர் சித்தார்த் கடந்த காலங்களில் உறவிலிருந்தனர் என்பது எல்லோருக்கும் தெரியும். சில காரணங்களால், அவர்களின் உறவு அடுத்தகட்டத்துக்குச் செல்லாமல், பிரிந்தனர். அதன் பிறகு அவர் தனது முதல் பட நாயகனும் பிரபல நடிகருமான நாக சைதன்யாவை மணந்தார். பிரபல நடிகர் நாகர்ஜூனாவின் மகன் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் வரும் 28ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாட உள்ளார் நடிகை சமந்தா. அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக உள்ள CDP எனப்படும் Common Display Picture-றை நடிகை தமன்னா தனது ட்விட்டர் வெளியிட்டுள்ளார். மேலும் இதை வெளியிடுவது பெருமையளிக்கிறது என்றும். அவர் ஒரு சிறந்த நடிகை என்று புகழாரம் சூட்டியுள்ளார்
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com