முகப்புகோலிவுட்

'இப்போது இதை நீங்களும் செய்யுங்கள்' - தளபதிக்கு அழைப்புவிடுத்த "சூப்பர் ஸ்டார்"..!

  | August 11, 2020 12:16 IST
Mahesh Babu

துனுக்குகள்

 • அண்மையில் க்ரீன் இந்தியா challenge என்ற ட்ரெண்ட் ஆகும் ஹாஷ் டேக்
 • தனது பிறந்தநாளில் வீட்டில் மரக்கன்றுகளை நட்ட மகேஷ் பாபு மேலும்
 • இந்த விஷயத்தை எல்லோரும் முன்னெடுத்து செய்ய வேண்டும் என்றும்
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா அண்மையில், இஷா கிரியா யோகாவில் ஈடுபடும் புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். அது குறித்து ஒரு செய்தியையும் வெளியிட்டார். இன்ஸ்டாவில் 7 மில்லியன் பின்தொடர்பாளர்களையும், அதற்கும் மேலான ஏகப்பட்ட ரசிகர்களையும் கொண்டுள்ள இந்த அழகிய நடிகையின் யோகா புகைப்படங்கள் தற்போது செம வைரலாகிவருகிறது. 

மேலும் அண்மையில் க்ரீன் இந்தியா challenge என்ற ட்ரெண்ட் ஆகும் ஹாஷ் டேக் challengeக்கு பதில் அளிக்கும் விதமாக சமந்தா தனது மாமனாரும் பிரபல நடிகருமான நாகார்ஜூனா அவர்களுடன் இணைந்து மூன்று மரக்கன்றுகளை தனது வீட்டில் நாட்டார். மேலும் நடிகைகள் கீர்த்தி மற்றும் ராஷ்மிக்கா ஆகியோருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். ஒருவர் பின் ஒருவராக தொடர்ந்த இந்த பசுமை போட்டி தற்போது பிரபல நடிகர் மகேஷ் பாபு அவர்களிடம் வந்து நிற்கிறது. 

இந்நிலையில் தனது பிறந்தநாளில் வீட்டில் மரக்கன்றுகளை நட்ட மகேஷ் பாபு மேலும் தளபதி விஜய், பிரபல நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் பிரபல நடிகை ஸ்ருதி ஹாசன் ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் இந்த விஷயத்தை எல்லோரும் முன்னெடுத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com