முகப்புகோலிவுட்

“எனக்கு எதிராக ஒரு கும்பல் வேலை செய்கிறது”- ஏ.ஆர்.ரஹ்மான்

  | July 27, 2020 18:43 IST
Ar Rahman

ரஹ்மான் பெரிதும் பாராட்டப்பட்ட குரு, ராக்ஸ்டார், தில்சே, ரோஜா, லகான், ராஜ்ஜனா, சுவேடஸ் போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

“மக்கள் தன்னிடம் பலவிதமான இசைப்பாடல்களை எதிர்ப்பார்க்கின்றனர். ஆனால் அதைத் தடுப்பதற்காக ஒரு கும்பல் வேலை செய்கிறது” என்று பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியிருக்கிறார்.

முக்கிய துணுக்குகள்
⮚    ஏ.ஆர்.ரஹ்மான் ‘தில் பச்சேரா' என்ற படத்திற்காக இசையமைத்திருந்தார். 
⮚    ‘தில் பச்சேரா' சுஷாந்த் சிங்கின் கடைசி திரைப்படமாகும்.
⮚    “ஒரு கும்பல் எனக்கு எதிராக வதந்திகளை பரப்புகிறது”- ஏ.ஆர்.ரஹ்மான் 

தனக்குப் போதுமான வேலை இந்தி திரையுலகில் கிடைக்கவில்லை என்றும் தனக்கு எதிராக ஒரு கும்பல் வேலை செய்கிறது என்றும் ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியிருக்கிறார். அவர் மறைந்த சுஷாந்த் சிங்க் ராஜ்புட் நடித்த ‘தில் பச்சேரா' என்ற திரைப்படத்திற்காக ஒன்பது பாடல்களை இசையமைத்திருந்தார். இத்திரைப்படமானது ஜூலை 24 அன்று ஹாட்சாரில் வெளியிடப்பட்டது.
ரேடியோ மிர்ச்சி நடத்திய நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் தாங்கள் ஏன் பாலிவுட்டில் அதிகம் இசையமைப்பதில்லை என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் பாலிவுட்டில் தன்னை தவறாக புரிந்து கொண்ட ஒரு கும்பல் தனக்கு எதிராக வதந்திகளை பரப்புவதாகக் கூறினார்.

தில் பச்சேரா படத்தின் இயக்குநர் முகேஷ் சப்ராவிடம் பலர் தன்னை அணுக வேண்டாம் எனக் கூறியதாகவும் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார். எனினும் அந்த திரைப்படத்திற்காக இரண்டு நாட்களில் 4 பாடல்களை, தான் இசையமைத்ததாகவும் அவர் கூறினார்.

ரஹ்மான் பெரிதும் பாராட்டப்பட்ட குரு, ராக்ஸ்டார், தில்சே, ரோஜா, லகான், ராஜ்ஜனா, சுவேடஸ் போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் அந்நிகழ்ச்சியில், “எல்லா செயல்களும் கடவுளிடமிருந்து வருவதாக நம்புகிறேன். பலவிதமான இசைப்பாடல்களை தொடர்ந்து தருவேன்' எனக் கூறினார்.

ஏ.ஆர்.ரஹ்மான் பல மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். அவர் ஆறு முறை தேசிய விருதும், இரண்டு ஆஸ்கார் விருதும் பெற்றுள்ளார். இவற்றில் நான்கு விருதுகள் 2008-ல் வெளிவந்த ‘ஸ்லம்டாக் மில்லியனர்' என்ற திரைப்படத்திற்காக கிடைத்ததாகும்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com