முகப்புகோலிவுட்

"நினைவில் கொள்ள வேண்டிய நாட்கள் இவை" - கவின் சொல்லும் அழகான செய்தி

  | April 28, 2020 08:24 IST
Kavin

துனுக்குகள்

 • சின்ன திரை நாடகங்களில் நடிக்கும்போது பெண்கள் மத்தியில்
 • ஏற்கனவே நட்புன்னா என்னனு தெரியுமா என்ற படத்தில்
 • தற்போது நிலவும் சூழல் குறித்து நடிகர் கவின் ஒரு பதிவினை
சின்ன திரை நாடகங்களில் நடிக்கும்போது பெண்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்புடன் வலம்வந்தவர் தான் நடிகர் கவின். அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அவருக்கான விசிறிகளின் அளவு அதிகரித்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் இலங்கை தமிழர் லாஸ்லியா மீது காதல் கொண்டார். அந்த சீசன் பிக் பாசில் இவர்களின் காதல் கதை ஒரு தனிக்கதை. 

அதற்கு பின் தற்போது லாஸ்லியா கதாநாயகியாக மாற, ஏற்கனவே நட்புன்னா என்னனு தெரியுமா என்ற படத்தில் ஹீரோவாக வலம்வந்த கவின் மீண்டும் ஹீரோவாக களமிறங்கினார். லிப்ட் என்ற படத்தில் கமிட் ஆகி நடித்து வந்தார். இந்த தகவலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். தற்போது ஊரடங்கின் காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பல நடிகர்கள் தங்கள்  வீட்டில் குடும்பத்தோடு நேரத்தை செலவிட்டு வருகின்றனர். 

இந்நிலையில் தற்போது நிலவும் சூழல் குறித்து நடிகர் கவின் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் "நினைவில் கொள்ள வேண்டிய நாட்கள் இவை", என்ற தலைப்பில் பல விஷயங்களை அவர் கூறியுள்ளார். தற்போது நிலவும் இந்த சூழல் மாறி நாம் அனைவரும் வெளியில் செல்லும்போது நம்முடைய எண்ணம் எப்படி இருக்கும் என்பதை அவர் கூறியுள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com