முகப்புகோலிவுட்

"அவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யமுடியாது" - பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் போட்ட ட்வீட்

  | March 19, 2020 15:10 IST
Pa Ranjit

துனுக்குகள்

 • பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம்
 • அந்த பதிவில் நாட்டில் குப்பை அள்ளுபவர்கள்
 • என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்
ஒட்டுமொத்த உலகின் ஒரே குரலாகத் திரும்பும் பக்கமெங்கும் ஒலிக்கும் ஒரே விஷயம் கொரோனாவாகக்தான் உள்ளது. வரலாறு கண்டிராத அளவிற்கு ஒரு மிகப் பெரிய அச்சத்தை வெளிப்படையாகச் சொல்லப்போனால் உயிர் பயத்தை நமக்குத் தந்துள்ளது பரவி வரும் கொரோனா தொற்று. ஆண்டின் தொடக்கத்தில் சீனாவில் பரவியபோது இந்தியாவை இந்த நோய் தாக்காது, 4000 கிலோமீட்டர் தாண்டி இந்த நோய் இங்கு வராது என்று எண்ணிய நமக்கு தற்போது பெரும் ஆபத்தை வந்து இறங்கியுள்ளது இந்த கொரோனா. ஆனால் சத்தான உணவுகளும், மிகச் சிறந்த சுகாதாரமும் இந்த நோயை எளிதில் நம்மிடம் இருந்து விளக்கிச் செல்லும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 

இந்நிலையில் இந்தியாவில் பல நகரங்களில், பல நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தபடி வேலை செய்ய அறிவுறுத்தி வருகின்றன. மத்திய மாநில அரசுகளும் பள்ளி மற்றும் கல்லூரி போன்ற பல இடங்களுக்குத் தற்காலிக விடுமுறை அளித்துள்ளது. 

இதனை அடுத்து பிரபல திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளது. அந்த பதிவில் நாட்டில் குப்பை அள்ளுபவர்கள், கூட்டுபவர்கள் மற்றும் துப்புரவு பணி செய்பவர்கள் யாரும் வீட்டிலிருந்து வேலை செய்யமுடியாது, இந்நிலையில் அவர்களுக்காக என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்று சுகாதார அமைச்சகத்தையும் நாட்டின் பிரதமர் மோடியையும் அவர் அந்த ட்விட்டர் பதிவில் கேட்டுள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com