முகப்புகோலிவுட்

'இன்னும் சீரியஸ்னஸ் தெரியல' - வீடியோ வெளியிட்ட சிவகார்த்திகேயன்

  | March 25, 2020 13:28 IST
Sivakarthikeyan

துனுக்குகள்

 • சரி நோய் பரவத் தொடங்கிவிட்டது இனி பேசி பயனில்லை
 • இந்நிலையில் நாடு முழுவது அடுத்த 21 நாட்களுக்கு முழு அடைப்பு
 • எப்போதும் உலகின் மிகச்சிறந்த சொல், செயல்
பூகம்பம், சுனாமி போன்ற பேரழிவில் மனிதர்கள் கொத்து கொத்தாய் இறந்தபோது கூட சக மனிதனின் இறப்பைக் கண்டு பிற மனிதன் வருந்தினானே அன்றி தனக்கும் இது நேரும் என்று கவலைகொள்ளவில்லை. காரணம் அந்த பேரழிவுகள் நிலம் மட்டும் இடம் சார்ந்த வருபவை. ஆனால் இப்போது உலகை உலுக்கி வரும் இந்த கொரோனாவிற்கு எந்த இடம் என்பது கணக்கில்லை. சீனாவில் உள்ள ஹுபே மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் தொடங்கியது, ஆனால் இப்போது உலகில் 70 சதவிகித நாடுகளில் பரவி உள்ளது. 

சரி நோய் பரவத் தொடங்கிவிட்டது இனி பேசி பயனில்லை, அரசும் மக்களும் களமிறங்கிச் செயல்பட்டால் மட்டுமே இதை முடிவுக்குக் கொண்டுவர முடியும். இந்நேரத்தில் மனிதர்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ளப் பலரும் பல விஷயங்களைக் கூறி வருகின்றனர், குறிப்பாகத் திரை பிரபலங்கள் கடந்த சில நாட்களாகவே பல நடிகர் நடிகைகள் தங்களால் இயன்ற விழிப்புணர்வு வீடியோகளை மக்களுக்கு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாடு முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர் மோடி. தற்போது இந்த நோயின் வீரியம் சில மக்களுக்கு புரியவில்லை என்று நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். எப்போதும் உலகின் மிகச்சிறந்த சொல், செயல் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com