முகப்புகோலிவுட்

'முடித்திருத்தம் செய்யும் தாய்..!!' - வேதிகாவை கலாய்த்த பிரேம்ஜி அமரன்

  | May 18, 2020 15:02 IST
Vedhika

துனுக்குகள்

 • முனி, காளை, சக்கரக்கட்டி போன்ற படங்களில் நடித்த நடிகை
 • இந்நிலையில் இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டில் குடும்பத்துடன்
 • அதனை மேற்கோள்கட்டி அந்த படத்தில் பேய் நடந்து வரும்
முனி, காளை, சக்கரக்கட்டி போன்ற படங்களில் நடித்த நடிகை வேதிகாவிற்கு ஆரம்ப நிலையில் கோலிவுட்டில் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. அதன் பின் இயக்குநர் பாலா இயக்கிய பரதேசி படத்தில் நடித்த வேதிகாவிற்கு சிறந்த நடிப்பிற்கான மூன்று விருதுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. தற்போது கன்னடம், மலையாளம், இந்தி, தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டில் குடும்பத்துடன் தனது நேரத்தை செலவிடும் வேதிகா தனது சமூக வலைத்தளங்களில் படு ஆக்ட்டிவாக உள்ளார் என்றால் அது மிகையல்ல. இந்நிலையில் நேற்று அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் தனது தாய் தனக்கு முடித்திருத்தம் செய்ய இருப்பதாகவும் தற்போது தனது தலைமுடி Ring படத்தில் வரும் பேயை போல உள்ளதாகவும் தெரிவித்தார். 

அதனை மேற்கோள்காட்டி அந்த படத்தில் பேய் நடந்து வரும் காட்சி ஒன்றை வெளியிட்டு வேதிகாவை கலாய்த்துள்ளார் பிரபலர் நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com