முகப்புகோலிவுட்

'இது பொக்கிஷம் போன்றது' - இசை மேதைகளுடன் இமான், வெளியான throwback புகைப்படம்..!!

  | July 09, 2020 07:24 IST
D Imman

துனுக்குகள்

 • பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா மற்றும், கும்கி ஆகிய இரு படங்களில்
 • இந்த 2020ம் ஆண்டு மட்டும் சுமார் 10-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இவர்
 • அவர் எடுத்துக்கொண்ட குரூப் போட்டோவை அவர் தற்போது வெளியிட்டுள்ளார்
தமிழ் சினிமா உலகிற்கு கிடைத்த பல அற்புதமான இசையமைப்பாளர்களில் நிச்சயம் டி. இமான் அவர்களுக்கு சிறப்பான இடமுண்டு. 2002ம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தின் மூலம் இவர் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அறிமுகமான முதல் படத்திலேயே பெரிய அளவில் பெயர்பெற்ற இசையமைப்பாளராக அவர் உயர்ந்தார்.

இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா மற்றும், கும்கி ஆகிய இரு படங்களில் இசையமைத்ததற்காக இவர் பல விருதுகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அடுத்த 2021ம் ஆண்டு வெளிவர இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்தே படத்திற்க்கு இவர் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த 2020ம் ஆண்டு மட்டும் சுமார் 10-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இவர் இசையமைத்து வருகின்றார். 

அண்மைக்காலமாக தனது சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் இமான் நேற்று ஒரு அழகான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமா உலகின் இசை மேதைகளனாக எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல முன்னணி இசை கலைஞர்களுடன் கடந்த 2005ம் ஆண்டு அவர் எடுத்துக்கொண்ட குரூப் போட்டோவை அவர் தற்போது வெளியிட்டுள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com