முகப்புகோலிவுட்

'பல காரணங்களுக்காக கண்ணீர் வருகிறது' : Dil Bechara - சுஷாந்த்தை நினைவுகூரும் கவின்..!

  | July 26, 2020 09:01 IST
Kavin

துனுக்குகள்

  • கடந்த வெள்ளியன்று சுஷாந்த் நடிப்பில் உருவான இறுதித் திரைப்படம் வெளியானது
  • பிரபல நடிகர் கவின் அவர்கள் Dil Bechara படத்தை பார்த்துவிட்டு
  • சொர்க்கத்தில் இருப்பதை விட நீங்கள் இங்கே இருந்திருக்க வேண்டும்.
இந்த ஆண்டு குறிப்பாக இந்த லாக் டவுன் காலத்தில் பல திரைப்பிரபலன்கள் இந்த உலகை விட்டு மறைந்தது பலரை சோகத்தில் ஆழ்த்தியது. ஆனால் சுஷாந்த் சிங் என்ற அந்த அருமையான நடிகரின் (தற்கொலை) மரணம் அவர் ரசிகர்கள் மட்டும் இன்றி பலரை சோகக்கடலில் ஆழ்த்தியுள்ளது என்றால் அது மிகையல்ல. பெயர் புகழ் என்று எல்லாம் இருந்தபோதும் அவர் தற்கொலை செய்துகொண்டது திரையுலகில் அதிர்ச்சியையும் சிறு அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவருடைய மரணத்திற்கு பல காரணங்கள் கூறினாலும் மாண்டவர் திரும்புவதில்லை என்பதே நிதர்சனம். 

இந்நிலையில் கடந்த வெள்ளியன்று அவருடைய சுஷாந்த் நடிப்பில் உருவான இறுதித் திரைப்படம் வெளியானது. 'Dil Bechara' என்ற அந்த திரைப்படம் பலருடைய கணவனத்தை ஈர்த்துள்ளது. ஹிந்தி மற்றும் இன்றி பல திரைத்துறையை சார்ந்த கலைஞர்கள் இப்படம் குறித்த தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். 

தற்போது பிரபல நடிகர் கவின் அவர்கள் Dil Bechara படத்தை பார்த்துவிட்டு தனது கருத்தினை ட்விட்டர் பதிவு ஒன்றில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் "இந்த தருணம் கடுமையானதாக உள்ளது, பல காரணங்களுக்காக கண்ணீர் வருகிறது. சொர்க்கத்தில் இருப்பதை விட நீங்கள் இங்கே இருந்திருக்க வேண்டும்." என்று நெகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com