முகப்புகோலிவுட்

'இது ரொம்ப தப்பு..' - போலீசின் செயலுக்கு வருத்தம் தெரிவித்த சாந்தனு

  | March 26, 2020 12:38 IST
Shanthanu

துனுக்குகள்

  • பரவி வரும் கொரோனா அச்சத்தால் இந்தியா முழுதும் ஸ்தம்பித்து உள்ளது
  • அவ்வாறு தேவை இன்றி வெளியில் சுற்றித்திரியும் நபர்களை
  • கொரோனா குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து பரப்பி வரும்
பரவி வரும் கொரோனா அச்சத்தால் இந்தியா முழுதும் ஸ்தம்பித்து உள்ளது. மக்கள் தேவை இன்றி வெளியே செல்ல வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி வரை கடுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் தகுந்த பாதுகாப்புடன் வெளியில் வந்து, தகுந்த இடைவெளி விட்டு கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்கி செல்லலாம் என்ற ஒரு சிறிய தளர்வையும் அரசு கொடுத்துள்ளது. பல இடங்களில் மக்கள் தேவை இன்றி வெளியில் வருவதை முற்றிலும் தவிர்த்தாலும், சிலர் இந்த கடுமையான சூழலிலும் தேவையின்றி வெளியில் சுற்றி வருகின்றனர். 

அவ்வாறு தேவை இன்றி வெளியில் சுற்றித்திரியும் நபர்களைக் கண்ட இடத்தில் கடுமையாகத் தண்டித்தும் வருகின்றனர் போலீசார். ஆனால் நேற்று இந்தியாவில் வீட்டிற்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்கிச்சென்ற ஒருவரை போலீசார் தாக்கியுள்ளனர். இந்த நிகழ்வை ஒருவர் வீடியோ எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே இந்த கொரோனா குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து பரப்பி வரும் நடிகர் சாந்தனு இந்த நிகழ்வினையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு போலீசாரின் இந்த செயல் மிகவும் தவறானது என்று கூறியுள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்