முகப்புகோலிவுட்

'இந்த திரைப்படம் எனது பிள்ளை..!!' - விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி சொன்ன சீனு ராமசாமி

  | May 22, 2020 11:22 IST
Seenu Ramasamy Tweets

துனுக்குகள்

 • கடந்த 2019ம் ஆண்டு இவர் இயக்கத்தில் 'கண்ணே கலைமானே' திரைப்படம்
 • இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த படம் தற்போது நிலவு ஊரடங்கு
 • பதறிய திரவுபதியின் மனநிலையில் சிக்குண்ட எமக்கு
2007ம் ஆண்டு வெளியான கூடல் நகர் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் தான் இயக்குநர் சீனு ராமசாமி. தான் இயக்கும் படங்களில் சிலவற்றுள் இவர் நடித்தும் வருகின்றார். 'தென்மேற்கு பருவக்காற்று', ‘நீர் பறவை', ‘இடம் பொருள் ஏவல்' 'தர்மதுரை' உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கியது இவரே. 

கடந்த 2019ம் ஆண்டு இவர் இயக்கத்தில் 'கண்ணே கலைமானே' திரைப்படம் வெளியாகி பாராட்டுகளை பெற்றது. உதயநிதி ஸ்டாலின், தமன்னா, வடிவுக்கரசி, 'பூ' ராமு உள்பட பல நடிகர்கள் நடித்திருந்த இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்நிலையில் தற்போது நிலவும் இந்த ஊரடங்கு காரணமாக பல படங்கள் வெளியாகாமல் தடைப்பட்டுள்ள நிலையில் சீனு ராமசாமி இயக்கத்தில் மக்கள் செல்வன் நடித்திருக்கும் 'இடம் பொருள் ஏவல்' என்ற படமும் பல ஆண்டுகளாக வெளிவராமல் உள்ளது. 

இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த படம் தற்போது நிலவு ஊரடங்கு முடிந்தவுடன் வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டது. தற்போது அந்த மகிழ்ச்சியான செய்தியை உறுதி செய்துள்ளார் அப்படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி. அது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் "சூதர்மனைதனில் உருவப்படும் சேலையை பற்றாமல் தன் இரண்டு கைகளையும் உயர்த்திக் "கிருஷ்ணா கிருஷ்ணா" எனப் பதறிய திரவுபதியின் மனநிலையில் சிக்குண்ட எமக்கு ஆறுதல். இது திரைப்படந்தான் ஆனால் எனக்கு பிள்ளை,இயக்குநர் திரு,லிங்குசாமிக்கு நன்றி #இடம்பொருள்ஏவல் வெளியீடு", என்று குறிப்பிட்டுள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com