முகப்புகோலிவுட்

'அவர்கள் கை காட்டும் இடத்தில் கழுத்தை நீட்டுவேன்' - முற்றுப்புள்ளி வைத்த அனுஷ்கா

  | February 22, 2020 12:04 IST
Anushka Shetty

2005ம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'சூப்பர்' என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் அனுஷ்கா

துனுக்குகள்

  • 'அவர்கள் கை காட்டும் இடத்தில் கழுத்தை நீட்டுவேன்'
  • புகழோடு சேர்த்து புரளிகளும் அவர்களை சூழ்ந்துகொள்கின்றது
  • 'சூப்பர்' என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் அனுஷ்கா
திரையுலக பிரபலங்கள் என்று வந்துவிட்டாலே புகழோடு சேர்த்து புரளிகளும் அவர்களைச் சூழ்ந்துகொள்கின்றது. புகழைத் தொடாத நடிகர் நடிகைகள் கூட இங்கு உண்டு ஆனால் புரளிகளையும், கிசுகிசுக்களையும் காணாத நடிகர்கள் இங்கு எவரும் இல்லை. அதிலும் பல ஆண்டுகாலமாகவே புகழின் உச்சத்தில் உள்ள ஒரு நடிகை இந்த கிசுகிசு சிக்கலில் சிக்கித் தவித்து வந்த நிலையில் அவரே அதற்கு இப்போது முற்றுப்புள்ளி ஒன்றையும் வைத்துள்ளார். 

2005ம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'சூப்பர்' என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் அனுஷ்கா. இவரின் நடிப்பு, அழகு மற்றும் உயரம் அதி விரைவில் இவரை முன்னணி நடிகையாகியது. 2006ம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளியான 'இரண்டு' படத்தின் மூலம் தமிழில் கால்பதித்தார் அனுஷ்கா. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பாகுபலி படத்தில் இவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இது ஒருபுறம் இருக்க, திருமண விஷயத்தில் அடிக்கடி கிசுகிசுக்களில் சிக்கும் நாயகியாக அனுஷ்கா மாறினார். 

இதுகுறித்து ஒரு தனியார் நிறுவனத்திற்குப் பேட்டியளித்தபோது பேசிய அனுஷ்கா, முதலில் ஒரு பிசினஸ் மேன், பிறகு உடன் நடித்த நடிகர், இப்போது ஒரு கிரிக்கெட் வீரர் என்று பல முறை எனக்குக் காதல் கல்யாணம் செய்து வைத்துள்ளனர். நடிகைகளைப் பற்றி கிசுகிசு வருவது இயல்பு தான், ஆனால் இது எனக்கு அடிக்கடி நிகழ்வதால் சற்று வருத்தமாக உள்ளது என்று கூறினார். 
மேலும் நான் யாரையும் காதலிக்கவில்லை, பெற்றோர் கைகாட்டும் இடத்தில் நான் என் கழுத்தை நீட்டுவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.     

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்