முகப்புகோலிவுட்

விஜய் சேதுபதி படத்தில் இணையும் மூன்று இசையமைப்பாளர்கள்!

  | November 08, 2019 17:05 IST
Vijay Sethupathi

துனுக்குகள்

 • லாபம் படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி
 • அடுத்தடுத்து படங்கள் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக இருக்கிறது
 • இந்த படத்தில் மூன்று இசை அமைப்பாளர்கள் இசை அமைக்கவுள்ளனர்
ஆண்டு தோறும் அதிக படங்களை நடித்து மக்கள் செல்வன் என்கிற மகத்தான பட்டத்தை பெற்ற விஜய் சேதுபதி இந்த ஆண்டும் தனது பட வேட்டையை தொடர்ந்திருக்கிறார். தற்போது இவர் 'லாபம்', 'க/பெ ரணசிங்கம்', 'மாமனிதன்', 'தளபதி 64', 'கடைசி விவசாயி' மற்றும் முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படம் என அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.
 
இதில் கிரிகெட் விளையாட்டு வீரத் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் விஜய் சேதுபதி அந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்கிற அறிவிப்பு வெளியான போது பல்வேறு தமிழ் அமைப்புகளிடமிருந்து அவருக்கு எதிர்ப்பு வந்தது. பலர் இந்த படத்தை தவிர்க்குமாறு கோரிக்கை வைத்தனர்.
 
அதே போல் சமீபத்தில் தனியார் இணையதள வர்த்தக விளம்பரம் ஒன்றில் விஜய் சேதுபதி நடித்ததற்காக வியாபரிகள் தரப்பில் அவரது அலுவலகம் முற்றுகை போராட்டாம் நடைபெற்றது. இப்படி பல்வேறு பிரச்னைகளும் அவரை சூழ்ந்து வருகிறது. இருப்பினும் விமர்சனங்களை கடந்து அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
 
இந்த சூழ்நிலையில் விஜய் சேதுபதியின் 33வது படமாக 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' திரைப்படம் உருவாகவுள்ளது. இதனை வெங்கட கிருஷ்ணா இயக்கவுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி இசை கலைஞராக நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கு, 3 இசையமைப்பாளர்கள் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் யார் யார் என்பதை பொருத்திருந்ததான் பார்க்க வேண்டும். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com