முகப்புகோலிவுட்

இளையராஜா இசையில் முதல் முறையாக நடிக்கும் விஷால்!

  | September 10, 2019 19:49 IST
Vishal

துனுக்குகள்

 • விஷால் நடிக்கும் துப்பரிவாளன் படத்திற்கு இசை அமைக்கிறார் இளையராஜா
 • இன்று இளையராஜாவை சந்தித்து ஆசி பெற்றார் விஷால்
 • விஷால் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி 15 ஆண்டுகள் ஆகிறது
விஷால் நடிக்கும் “துப்பரிவாளன் 2” படத்திற்கு இளையராஜா இசை அமைக்கவிருக்கிறார்.
 
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான படம் துப்பரிவாளன். இப்படத்தை தயாரித்து நடித்திருந்தார் நடிகர் விஷால். இப்படத்தில் விஷாலுடன் பிரன்னா, வினை, அனு இம்மானுவேல், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.இப்படம் விமர்சன ரீதியாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படுமா என்கிற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக செய்தி வெளியானது. இந்த படத்தையும் இயக்குநர் மிஷ்கின் இயக்க விஷால் நாயகனாக நடிக்கிறார். இவருடன் இணையவிருக்கும் நடிகர் நடிகைகள் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்றோடு தமிழ் சினிமாவிற்கு விஷால் அறிமுகமாகி 15 ஆண்டுகள் நிறைவாகி இருக்கிறது. இந்த சமயத்தில் துப்பரிவாளன் 2 படத்திற்கு இசைஞானி இளைய ராஜா இசை அமைக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.  விஷால் மற்றும் மிஷ்கின் இருவரும் இளையராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்ற புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இளையராஜா இசையில் முதல் முறையாக நடிக்கவிருக்கிறார் விஷால் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com