முகப்புகோலிவுட்

மீண்டும் மிஷ்கின் இயக்கத்தில் இணையும் விஷால்!

  | August 17, 2019 17:04 IST
Thupparivaalan 2

துனுக்குகள்

  • துப்பரிவாளன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது
  • மிஷ்கின் தற்போது லண்டனில் இருக்கிறார்
  • இப்படம் குறித்த விரிவான செய்தி விரைவில் வெளியிடப்படும்
கடந்த 2017ம் ஆண்ட இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான படம் ‘துப்பறிவாளன்'. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை மிஷ்கின் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எவ்வித அறிவிப்பும் வராத நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது என்பதை உறுதி செய்யும் விதமாக செய்தி கிடைத்திருக்கிறது.
 
துப்பறிவாளன் படத்தில் விஷால், ஆண்ட்ரியா, பிரன்னா, வினய், அனு இம்மானுவேல், பாக்கியராஜ், ஜான் விஜய் இன்னும் பலர் நடித்தனர்.இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்தது.

தற்போது அந்த செய்தியை நடிகர் பிரசன்னா உறுதிபடுத்தியுள்ளார். அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் துப்பறிவாளன் படத்திற்கான பணிகளில் இயக்குநர் மிஷ்கின் ஈடுபட்டுள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அதில் தற்போது லண்டனில் படத்திற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார் என்பது தெறியவருகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்