முகப்புகோலிவுட்

"இதனையும் கொஞ்சம் கேளுங்க" - பாராட்டிய கமிஷ்னர், நன்றி சொன்ன 'ஹீரோ'..!!

  | July 07, 2020 13:29 IST
Tirunelveli Deputy Commissioner Of Police

துனுக்குகள்

 • மிமிக்கிரி ஆர்டிஸ்டாக களமிறங்கி, இன்று 'அடுத்த இளைய தளபதி' என்று பல
 • அண்மையில் குடிப்பழக்கம் மற்றும் புகைபிடிப்பது குறித்து சிவகார்த்திகேயன்
 • நட்சத்திரங்கள் சொல்வதை அப்படியே கேட்பவர்கள் என்றால் இதனையும்
மிமிக்கிரி ஆர்டிஸ்டாக களமிறங்கி, இன்று 'அடுத்த இளைய தளபதி' என்று பல விமர்சகர்கள் கூரும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் என்று இவருக்கு அனைத்து வயதிலும் ரசிகர்கள் அதிகம். கடந்த சில காலமாகவே தான் நடிக்கும் கதைகளில் மிகுந்த கவனம் செலுத்தி நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். 

கடந்த 2019ம் ஆண்டு சிவகார்த்திகேயனுக்கு சிறந்த ஆண்டாக அமைந்தது, மிஸ்டர். லோக்கல், நம்ம வீட்டு பிள்ளை, ஹீரோ என்று மூன்று படங்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது அவருடைய அடுத்த படத்திற்க்கான அப்டேட் வந்துள்ளது. 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் ஆர்.டி ராஜா அவர்கள் தயாரிக்க, ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் சிவர்கார்த்திகேயன் நடிக்கும் 'அயலான்' படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. 'அயலான்' 'Destination Earth' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் 'சயின்ஸ் பிக்ஷன்' படமாக உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இந்நிலையில் அண்மையில் குடிப்பழக்கம் மற்றும் புகைபிடிப்பது குறித்து சிவகார்த்திகேயன் பேசிய காணொளி ஒன்றை மேற்கோள்கட்டி பேசிய திருநெல்வேலி மாவட்ட Deputy கமிஷனர் அர்ஜுன் சரவணன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் "நட்சத்திரங்கள் சொல்வதை அப்படியே கேட்பவர்கள் என்றால் இதனையும் கொஞ்சம் கேளுங்க. குடிக்க, புகைக்க எந்த நண்பனும் அழைக்க மாட்டான், அப்படி அழைப்பவர் நட்பிலிருந்து வெளியேறுங்கள். அவன் உங்களை உலகிலிருந்து வெளியேற அழைக்கிறான். என்று கூறி நன்றி சிவகார்த்திகேயன்" என்று குறிப்பிட்டுள்ளார். கமிஷ்னரின் பாராட்டுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com