முகப்புகோலிவுட்

வெளியானது கொரோனா கீதம்! சசிகுமார், ஆரி, நட்டி உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பங்கேற்பு.!!

  | June 22, 2020 12:45 IST
Senthil Das

தர்மதுரை படத்தில் “ஆண்டிபட்டி கணவா காத்து” பாடலின் மூலம் பாடகராக பிரபலமடைந்த செந்தில்தாஸ் இந்த பாடலுக்கு இசையமைத்திருக்கிறார்.

“கவசம் இது முகக்கவசம்” என்ற இந்த பாடலில் இயக்குனர் சசிகுமார், தேவயானி, ஆரி அருஜுனன், ஸ்ரீகாந்த் தேவா, சதுரங்கவேட்டை நடராஜ் (நட்டி), ஆடுகளம் ஜெயபாலன், ரமேஷ் கண்ணா, ரவி மரியா, வையாபுரி ஆகியோர் பங்கேற்று இருக்கிறார்கள்.

தர்மதுரை படத்தில் “ஆண்டிபட்டி கணவா காத்து” பாடலின் மூலம் பாடகராக பிரபலமடைந்த செந்தில்தாஸ் இந்த பாடலுக்கு இசையமைத்திருக்கிறார்.

மெட்டிஒலி சாந்தி நடனம் அமைக்க செந்தில்தாஸ், மாலதிலட்சுமணன், மற்றும் முகேஷ் இணைந்து இப்பாடலை பாடியிருக்கிறார்கள். இ.வி. கணேஷ்பாபு இந்த பாடலை எழுதி, இயக்கி இருக்கிறார். செழியன்குமாரசாமி தலைமை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டிருக்கிறார். இந்த கீதத்தை தமிழக அரசு தயாரித்து வெளியிட்டுள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com