முகப்புகோலிவுட்

"10 திரைத்துறை வல்லுனர்களின் புதிய முயற்சி" - துவங்கி வைக்கும் ஆர்யா மற்றும் விஜய் ஆண்டனி..!

  | September 13, 2020 11:39 IST
New Cinema Biz Of Gd

துனுக்குகள்

 • தமிழ் சினிமா உலகில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த தயாரிப்பாளராக
 • தற்போது தனஞ்செயன் அவர்கள் புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார். இது குறித்து
 • பிரபல நடிகர் ஆர்யா மற்றும் விஜய் ஆண்டனி ஆகியோர் தொடங்கிவைக்க உள்ளனர்
தமிழ் சினிமா உலகில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த தயாரிப்பாளராக, விநியோகஸ்தராக, நடிகராக, எழுத்தாளராக வளம்வருபவர் தான் திரு. தனஞ்சயன். Ph.D பட்டம் பெற்றுள்ள அவர் 2008ம் ஆண்டு வெளியான வெள்ளித்திரை என்ற படத்தின் மூலம் இணை தயாரிப்பாளராக திரையுலகில் அறிமுகமானார். தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் 30க்கும் மேற்பட்ட படங்களில் இவர் தயாரிப்பாளராகவும, இணை தயாரிப்பாளராகும் பணியாற்றியுள்ளார். 

மேலும் "THE BEST OF TAMIL CINEMA : 1931 TO 2010" மாற்றம் "PRIDE OF TAMIL CINEMA : 1931 TO 2013" என்ற இரு புத்தகங்களை இவர் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இருக்கும் புகழ்பெற்ற BOFTA நடிப்பு பள்ளியின் இயக்குநர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா துறையில் பணியாற்றியதற்காக இரண்டு முறை இவர் தேசிய விருது பெற்றுள்ளார். மேலும் மந்திர புன்னகை, கதை திரைக்கதை வசனம் இயக்கம் உள்ளிட்ட 6 படங்களில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தனஞ்செயன் அவர்கள் புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட பதிவு ஒன்றில் "திரைப்படத் துறையைச் சேர்ந்த எங்களில் 10 பேர் இணைந்து புதிய தயாரிப்பாளர்கள் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு பயனளிப்பதற்காக முதல் விரிவான மற்றும் ஒருங்கிணைந்த திரைப்பட வணிக தொடர்பான சேவையை வழங்க உள்ளோம்" என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த திட்டத்தை நாளை பிரபல நடிகர் ஆர்யா மற்றும் விஜய் ஆண்டனி ஆகியோர் தொடங்கிவைக்க உள்ளனர். 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com