முகப்புகோலிவுட்

'கருத்துக்களை பதிவு செய்' பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட தொல்.திருமா! அடுத்த ஆண்டு ரஜினி அரசியலுக்கு வருவார்! சினிமா பெட்டியில் இன்று

  | November 18, 2019 17:43 IST
Cinema Petti

துனுக்குகள்

 • உதயநிதியின் 'சைக்கோ' திரைப்படத்தின் பாடல் குறித்த தகவல்
 • உதயநிதி ஆஜராக தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் நோட்டீஸ்
 • தனுஷ் - செல்வராகவன் படத்தை உறுதி செய்த இசையமைப்பாளர்
தமிழ் சினிமாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை பதிவு செய்வதில் சினிமா பெட்டி முனைப்பாக இருக்கிறது. சமீபத்தில் நடந்த பல்வேறு சினிமா செய்திகளை தற்போது உங்களுக்கா தொகுத்து வழங்குகிறது சினிமா பெட்டி. இன்று 'கருத்துக்களை பதிவு செய்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் திருமாவளவன், அடுத்த ஆண்டு ரஜினி அரசியலுக்கு வருவார் - ரஜினியின் சகோதரர் உள்ளிட்ட செய்திகளை காண்போம்…
 
 'கருத்துக்களை பதிவு செய்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் திருமாவளவன்
 
சமூக வலைத்தளங்களால் பெண்கள் பாதிக்கப்படும் பிரச்சினைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் "கருத்துக்களை பதிவு செய்". இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பாராளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவன் வெளியிட்டார். இயக்குனர் ராகுல் இயக்கியுள்ள இந்த படத்தில் நாயகனாக ஆரியன் மற்றும் நாயகியாக உபாசனா ஆகியோர் அறிமுகமாகின்றனர். மேலும் இந்தப் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படகுழுவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
 
 
அடுத்த ஆண்டு ரஜினி அரசியலுக்கு வருவார் - ரஜினியின் சகோதரர்
 
நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதற்காகவும், அவர் விரைவில் அரசியலுக்கு வர வேண்டும் என்பதற்காகவும் ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா, தனது குடும்பத்துடன் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சத்ய நாராயணா, " அடுத்த ஆண்டு ரஜினி அரசியலுக்கு வருவார். அவர் எதற்கும் ஆசைப்படாதவர். அரசியலுக்கு வந்தாலும் அவர் எதற்கும் ஆசைப்பட மாட்டார்" என்று கூறினார்.
 
 
தனுஷ் - செல்வராகவன் படத்தை உறுதி செய்த இசையமைப்பாளர்
 
தனுஷின் சகோதரரும் பிரபல இயக்குனருமான செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த படத்திற்காக 2 பாடல்களை தயார் செய்து முடித்துவிட்டதாக இந்த படத்தின் இசையமைப்பாளர் சீன் ரோல்டன் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து தனுஷ் - செல்வராகவன் மீண்டும் இணைவது உறுதியாகியுள்ளது.
 
 
உதயநிதி ஆஜராக தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் நோட்டீஸ்
 
'அசுரன்' திரைப்படத்தை பார்த்த பின்னர் பஞ்சமி நிலம் பற்றி திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ட்வீட் செய்திருந்தார். இதனை குறிப்பிட்டு கேள்வி எழுப்பிய, பாமக தலைவர் ராமதாஸ் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார். இதனையடுத்து இவ்விவகாரம் தொடர்பாக பாஜக மாநில செயலாளர் சீனிவாசன், தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்தில் புகாரளித்தார். இந்நிலையில் முரசொலி நில விவகாரம் தொடர்பாக அதன் நிர்வாக இயக்குநர் உதயநிதி ஸ்டாலின் வரும் 19ம் ????தேதி ஆஜராக தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
 
 
 'மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்' திரையிடும் தேதி மாற்றம்
 
இயக்குனர் சரண் இயக்கத்தில், பிக் பாஸ் புகழ் ஆரவ் நாயகனாக நடித்து வரும் படம் 'மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்'. இந்தப் படத்தில் லேடி தாதாவாக நடிகை ராதிகா நடித்து வருகிறார். மேலும் இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இந்தப் படம் வருகின்ற 29ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
 
 
உதயநிதியின் 'சைக்கோ' திரைப்படத்தின் பாடல் குறித்த தகவல்
 
மிஸ்கின் இயக்கத்தில், உதயநிதி தற்போது 'சைக்கோ' என்று தலைப்பிடப்பட்டுள்ள திரில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் முதலாவது பாடலான "உன்னை நினைச்சு" பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com