முகப்புகோலிவுட்

சினிமா பெட்டியில் இன்று; பிறந்த குழந்தையுடன் பிரபல நடிகை! நஷ்டத்தில் எடுக்கப்படும் கமல் படம்!

  | September 28, 2019 12:41 IST
Indian 2

துனுக்குகள்

  • ஸ்ருதிஹாசன் நடிக்கும் 'டிரேட்ஸ்டோன்' தொடரின் ப்ரோமோ
  • நஷ்டத்தில் எடுக்கப்பட்டு வரும் இந்தியன் 2!
  • கார்த்தியின் ‘சுல்தான்’ படத்திற்கு எதிர்ப்பு - படக்குழு விளக்கம்
தினமும் பல்வேறு ஸ்வாரஸ்யமான சினிமா செய்திகளின் சிறு தொகுப்பை சினிமா பெட்டிமூலம் வழங்குவதில் மகிழ்ச்சிய அடைகிறது என்.டி.வி. தமிழ் சினிமா? திரைத்துறையில் இன்றைய முக்கிய செய்திகள் குறித்து தற்போது பார்ப்போம்…
 
 
பிறந்த குழந்தையுடன் வெளியே சென்ற பிரபல நடிகை – புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் அதிர்ச்சி
 
தமிழில் மதராசப்பட்டினம், 2.0, ஐ, உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்து கவனம் பெற்றவர் எமி.ஜாக்சன். இவர் தன் காதலருடன் வெளிநாட்டில் வசித்து வருகிறார். கர்ப்பமாக இருந்த ஏமி ஜாக்சன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்நிலையில் குழந்தை பிறந்த மூன்றே நாளில் குழந்தையுடன் வெளியே சென்றுள்ளார். அப்படி வெளியெ சென்றபோது எடுத்த புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள், "குழந்தை பிறந்த வேகத்தில் வெளியே செல்லக் கூடாது. குறைந்தது 40 நாட்களாவது வீட்டிலேயே இருக்க வேண்டும்" என அறிவுரை கூறி வருகின்றனர். இந்த போட்டோ தற்போத வைரலாகி வருகிறது
 
0r9us4k

 
ஸ்ருதிஹாசன் நடிக்கும் 'டிரேட்ஸ்டோன்' தொடரின் ப்ரோமோ
 
'7ஆம் அறிவு' திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது 'டிரேட்ஸ்டோன்' என்கிற அமெரிக்க தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடரில் 'நிரா படேல்' என்னும் கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார். மேலும் இத்தொடரில் சண்டை காட்சிகள் அதிகம் உள்ளது என்பதால், அதற்காக சிறப்பு பயிற்சிகளை ஸ்ருதி மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் இந்த தொடரின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 
64ees6v


நஷ்டத்தில் எடுக்கப்பட்டு வரும் இந்தியன் 2!
 
இந்தியத் திரையுலகத்தில் முதன் முதலில் 500 கோடி ரூபாய் செலவில் ஒரு படத்தைத் தயாரித்த மிகப் பெரும் நிறுவனமான லைக்கா, அந்நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தவர் மீது மோசடிக் குற்றச்சாட்டுகளைத் சமீபத்தில் தெரிவித்தது. இந்நிலையில் லைக்கா அளித்த புகாரில் "எங்களது அங்கீகாரம் இல்லாமல் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பை கருணாமூர்த்தி ஆரம்பித்துவிட்டதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக 4.35 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இருப்பினும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு லைக்காவின் அனுமதியோடு தான் நடைபெற்று வருகிறதா என்பதை லைக்கா அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
519ihtr


கார்த்தியின் ‘சுல்தான்' படத்திற்கு எதிர்ப்பு - படக்குழு விளக்கம்
 
பாக்கியராஜ் கண்ணன் - நடிகர் கார்த்தி கூட்டணியில் உருவாகி வரும் படம் 'சுல்தான்'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மலைக்கோட்டையில் நடைபெற்று வந்தது. இதை அறிந்த இந்து அமைப்புகள் சில திண்டுக்கல் மலைக்கோட்டையில் படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் படக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ‘இது சுல்தான் வாழ்க்கை பற்றிய படம் கிடையாது. பெயர் மட்டுமே அப்படி வைக்கப்பட்டுள்ளது என அவர்கள் விளக்கம் தெரிவித்துள்ளனர்.
 
n7caqe2o

 
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்