முகப்புகோலிவுட்

அஜித்திற்காக காத்திருக்கும் இயக்குனர்கள்!..! விஜய் மன்னிப்பு கேட்டார்- இந்திரஜா! கூடுதல் செய்திகளுடன் சினிமா பெட்டியில் இன்று!

  | November 04, 2019 17:01 IST
Cinema Petti

துனுக்குகள்

  • அஜித்திற்காக காத்திருக்கும் இயக்குனர்கள்!
  • சினிமா ரசிகர்களுக்கு அமேசானின் அதிரடி அறிவிப்பு!
  • குண்டம்மா என்று சொன்னதற்காக விஜய் மன்னிப்பு கேட்டார்!
சினிமா தொடர்பான ஸ்வாரஸ்யமான செய்திகளை தேர்ந்தெடுத்து உங்களுக்காக தொகுத்து வழங்கி வருகிறது சினிமா பெட்டி. இன்றைய சினிமா பெட்டியில் தொலைக்காட்சி தொடராக கலைஞர் கருணாநிதியின் வாழ்கை வரலாறு!... அஜித்திற்காக காத்திருக்கும் இயக்குனர்கள்!... சினிமா ரசிகர்களுக்கு அமேசானின் அதிரடி அறிவிப்பு! உள்ளிட்ட செய்திகளை காணவிருக்கிறோம். வாருங்கள் வாசிப்போம்..
 
 
தொலைக்காட்சி தொடராக முன்னால் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் வாழ்கை வரலாறு!
hpbls3g8

 
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தனது வாழ்க்கை வரலாற்றை ‘நெஞ்சுக்கு நீதி' எனும் தலைப்பில் ஏற்கனவே புத்தக வடிவில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் இந்த புத்தகத்தை மையமாக வைத்து தொலைக்காட்சி தொடர் ஒளிபரப்பாக உள்ளது. அதன்படி ‘நெஞ்சுக்கு நீதி' என பெயரிடப்பட்டுள்ள இந்த தொலைக்காட்சி தொடர் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகவுள்ளது.

 
அஜித்திற்காக காத்திருக்கும் இயக்குனர்கள்!
7v6pcup8

 
'நேர்கொண்ட பார்வை' படத்துக்கு பின் வினோத் இயக்கத்திலேயே இரண்டாவது முறையாக அஜித் தொடர்ந்து நடிக்கிறார். இந்தப் படத்திற்கு 'வலிமை' என தலைப்பிட்டுள்ளது. இந்நிலையில் அஜித்தை வைத்து படம் இயக்க ஏ.ஆர்.முருகதாஸ், கார்த்திக் நரேன், புஷ்கர்-காயத்ரி, சிறுத்தை சிவா என பல இயக்குனர்கள் காத்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதில் அஜித் யாருடன் இணைய இருக்கிறார் போகிறார் என பொறுத்து இருந்து பார்ப்போம்.
 
 
சினிமா ரசிகர்களுக்கு அமேசானின் அதிரடி அறிவிப்பு!
ul5a18uo

 
அமேசான் நிறுவனம் அனைத்து பொருட்களையும் வீட்டுக்கே வந்து கொடுக்கும் சேவையை செய்து வருகிறது. இந்நிலையில் அமேசானின் அடுத்த அதிரடி நடவடிக்கையாக இணையவழியாக சினிமா டிக்கெட்டுகள் விற்பனை செய்ய முன்வந்துள்ளது. அதன்படி அமேசான் நிறுவனத்தில் முன்பதிவு செய்யப்படும் சினிமா டிக்கெட்டுகளை இரண்டு சதவீத கேஷ்பேக் சலுகையையும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
 
 
குண்டம்மா என்று சொன்னதற்காக விஜய் மன்னிப்பு கேட்டார்!
vnmbctv8

 
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 25 ஆம் தேதி 'பிகில்' திரைப்படம் திரைக்கு வந்தது. இந்த படத்தில் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, ரெபா மோனிகா ஜான், இந்துஜா, வர்ஷா பொல்லம்மா, அம்ரிதா ஐயர், காயத்ரி ரெட்டி உள்பட பலர் விளையாட்டு வீராங்கனைகளாக நடித்திருந்தனர். இந்தப் படத்தின் கிளைமேக்ஸின் போது இந்திரஜாவை பார்த்து "குண்டம்மா, குண்டம்மா" என்று விஜய் கூறி இருப்பார். இந்நிலையில், முதலில் தன்னை குண்டம்மா என்று கூறுவதற்கு விஜய் தயங்கியதாகவும், இருப்பினும் காட்சியில் நடித்து முடித்த பிறகு விஜய் தன்னிடம் வந்து குண்டம்மா என்று கூறியதற்கு மன்னிப்பு கேட்டார் என்றும் இந்திரஜா கூறியுள்ளார்.
 
 
விஷாலின் 'ஆக்க்ஷன்' படம் குறித்த தகவல்
85utihoo

 
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் தமன்னா நடித்துள்ள படம் 'ஆக்க்ஷன்'. இப்படம் ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கிலும் ரிலீஸ் ஆகிறது. கிறிஸ்துமஸ் வரை தெலுங்கில் எந்த பெரிய படமும் வராது என்பதால் பிகில், கைதி ஆகிய படங்களை தொடர்ந்து இந்த படமும் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கின்றனர். இதனையடுத்து, இதன் தெலுங்கு ரிலீஸ் உரிமையை 8 கோடி ருபாய் கொடுத்து ஒரு முன்னணி நிறுவனம் வாங்கியுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
 
 
'எனை நோக்கி பாயும் தோட்டா' திரையிடும் தேதி அறிவிப்பு
uki9lkm8

 
தனுஷ் முதன் முறையாக கெளதம் வாசுதேவ் மேனனுடன் கூட்டணி அமைத்த படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா'. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் இயக்குநர் சசிகுமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் பல்வேறு பிரச்னைகளால் பலமுறை திரையிடும் தேதி அறிவிக்கப்பட்டு இந்தப் படம் திரைக்கு வராமலேயே உள்ளது. இந்நிலையில் தற்போது நவம்பர் 29ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்