முகப்புகோலிவுட்

சினிமா பெட்டியில் இன்று: ரஜினிகாந்த் இமயமலைக்கு பயணம்! 'தளபதி 64' படத்திற்கு சிக்கல்! நீதிமன்றத்தில் ஆஜரான விஷால்..  

  | October 14, 2019 14:10 IST
Rajinikanth

துனுக்குகள்

 • சேவை வரி வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜாரானர் நடிகர் விஷால்
 • அரசியலில் என்னம் இல்லை - கங்கனா ரனாவத் அதிரடி!
 • அரசியலில் என்னம் இல்லை - கங்கனா ரனாவத் அதிரடி!
இன்றைய சினிமா பெட்டியில் பல ஸ்வாரஸ்யமான சினிமா செய்திகள் உங்களுக்காக காத்திருக்கிறது…. ரஜினிகாந்த் இமயமலைக்கு பயணம்! தளபதி 64' படத்திற்கு சிக்கல்?..... உள்ளிட்டவை வாருங்கள் வாசிப்போம்...
 
Rajini: ரஜினிகாந்த் இமயமலைக்கு பயணம்

 
கடந்த 2010ம் ஆண்டுக்கு முன்பு வரை, ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார் நடிகர் ரஜினிகாந்த. உடல்நலக் குறைவு உள்ளிட்ட சில காரணங்களால் அடுத்தடுத்த ஆண்டுகளில் அவர் இமயமலை பயணத்தை ரத்து செய்தார். இந்நிலையில், ரஜினிகாந்த் 10 நாள் ஆன்மிகப் பயணமாக தற்போது இமயமலைக்கு புறப்பட்டுள்ளார். அங்கு கேதார்நாத், பத்ரிநாத், பாபாஜி குகை ஆகிய இடங்களுக்கு சென்று தங்க திட்டமிட்டுள்ளார். இமயமலை பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பியதும் இயக்குநர் சிவா படத்தில் ரஜினி கவனம் செலுத்த உள்ளார். இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
nq4umrp8
 

Thalapathy64: 'தளபதி 64' படத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல்?
 
'பிகில்' படத்தைத் தொடர்ந்து விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தளபதி 64' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும், சாந்தனு, ஆண்டனி வர்கீஸ் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்த நிலையில் இப்படத்தை தயாரிக்கும் பணியிலிருந்து சேவியர் பிரிட்டோ விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
6i558m9o


Keerthi suresh: கீர்த்தி சுரேஷின் 'மைதான்' படத்தின் அப்டேட்
 
இயக்குனர் அமித் ரவீந்தர்நாத் சர்மா இயக்கத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் ஹிந்தியில் அறிமுகமாகும் படம் 'மைதான்'. இந்தப் படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. மேலும் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த திரைப் படத்தில் அஜய் தேவ்கன் நாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படம் வருகின்ற 2020ம் ஆண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
5fbs1nn8

Kangana Ranaut:​ அரசியலில் என்னம் இல்லை - கங்கனா ரனாவத் அதிரடி!
 
ஈஷா யோகா மையத்தின் காவேரி கூக்குரல் நிகழ்ச்சிக்காக, கோவை வந்த பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், அங்கு நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் பணிகளை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 'தலைவி' படத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்தாலும் தனக்கு அரசியல் ஆர்வம் இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் தனது வாழ்க்கை ஜெயலலிதாவின் வாழ்க்கையோடு ஒத்து போவதாகவும் அவர் கூறினார்.
 
b8rqqchg

 
Vishal: சேவை வரி வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜாரானர் நடிகர் விஷால்

 
விஷால் முறையாக சேவை வரி செலுத்தவில்லை என்று அவருக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகி விளக்கம் அளிக்கத்ததால், அவர் மீது சேவை வரித்துறையினர் சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
 
இந்நிலையில், இந்த வழக்கில் விஷால் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது நீதிபதி, "சேவை வரித்துறையினர் பலமுறை சம்மன் அனுப்பியும் நீங்கள் அதை பெற்றுக் கொள்ளவில்லை. ஆஜராகாமல் வேண்டுமென்றே தவிர்திருக்கிறீர்கள் இது உண்மையா" என்று கேட்டார். அதற்கு விஷால் "இந்த குற்றச்சாட்டுகளை நான் மறுக்கிறேன்". என்றார். பின்னர் இரு தரப்பு வாதங்களையும் நீதிபதி கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து இந்த வழக்கை வருகின்ற நவம்பர் 11ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
fau3vhao

 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com