முகப்புகோலிவுட்

சினிமா பெட்டியில் இன்று: ரஜினிகாந்த் வெளியிட்ட புதுப்பட போஸ்டர், ஹன்சிகாவின் தீபாவளி பரிசு!....

  | October 31, 2019 15:11 IST
Cinema Petti

துனுக்குகள்

 • ஹன்சிகாவின் தீபாவளி பரிசு!
 • 'அந்த நாள்' படத்தின் போஸ்டரை வெளியிட்டார் ரஜினிகாந்த்!
 • 'தெறி' படத்தின் தெலுங்கு ரீமேக்கின் நாயகி இவரா⁉
மீண்டும் சினிமா பெட்டியில் இன்றய ஸ்வாரஸ்யமான செய்திகளை அளிப்பதில் மகிழ்ச்சி. ஹன்சிகாவின் தீபாவளி பரிசு! போஸ்டரை வெளியிட்டார் ரஜினிகாந்த், 'தெறி' படத்தின் தெலுங்கு ரீமேக்கின் நாயகி உள்ளிட்ட செய்திகளை வாசிப்போம்….
 
 
(Hansika Motwani) ஹன்சிகாவின் தீபாவளி பரிசு!
 
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்த நடிகை ஹன்சிகா, கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தற்போது தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் தனது உடல் எடையையும் குறைத்து விட்டார். இந்நிலையில் அவரது அம்மா தீபாவளிக்காக ஒரு விலையுயர்ந்த பரிசினை அவருக்கு வாங்கிக்கொடுத்துள்ளார். அது என்னவென்றால், 12 கோடி ருபாய் மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் பெண்டாம் VIII சீரீஸ் கார் தான் அந்த தீபாவளி பரிசாம்.
 
32av9lbg

 
(Rajini kanth) 'அந்த நாள்' படத்தின் போஸ்டரை வெளியிட்டார் ரஜினிகாந்த்!
 
ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வழங்கும் கிரீன் மேஜிக் என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் அறிமுக நாயகன் ஆர்யன் ஷாம் நடிக்கும் “அந்த நாள்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ரஜினிகாந்த் நேற்று மாலை வெளியிட்டார். கதாநாயகன் ஆர்யன் ஷாம் புகழ்பெறவும், ‘அந்த நாள்' படம் வெற்றி பெறவும் வாழ்த்துக் கூறினார். இதனையடுத்து, விரைவில் இப்படத்தின் மோஷன் போஸ்டர், டீசர், டிரைலர் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.
 
d85a9qi


  
'தெறி' படத்தின் தெலுங்கு ரீமேக்கின் நாயகி இவரா⁉
 
 
கடந்த 2016ம் ஆண்டு வெளியான ‘தெறி' திரைப்படத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், பேபி நைனிகா, இயக்குநர் மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றியினையடுத்து, தற்போது கோபிசந்த் இயக்கத்தில் ‘தெறி' படத்தின் தெலுங்கு ரீமேக் உருவாகவுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. ரவி தேஜா ஹீரோவாக நடிக்கும் இப்படத்திற்கு ‘ஆர்.டி.66' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. தற்போது, இப்படத்தின் ஹீரோயினாக நடிகை ஸ்ருதிஹாசன் இணைந்திருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘பலுபு' என்ற படத்திற்கு பிறகு நடிகை ஸ்ருதிஹாசன் மீண்டும் ரவி தேஜாவுடன் இணைந்து நடிக்கிறார்????என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
s3co09jg

 
யோகி பாபு படத்தின் ரிலீஸ் தேதி!
 
காமெடியில் கொடி கட்டிப்பறக்கும் யோகிபாபு தர்மபிரபு, கூர்கா, ஜாம்பி ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது "பட்லர் பாலு" எனும் படத்தில் காமெடியனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் யோகிபாபுவிற்கு கல்யாண வீடுகளில் சமையல் செய்யும் சமையல் காரர் வேடம். ஒரு இரவுக்குள் நடக்கும் காமெடி கலந்த திரைக்கதையாக இப்படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் எம்.எல்.கதிர். இதனையடுத்து முகேஷ் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை நவம்பர் 8ம் தேதி உலகமெங்கும் அதிகமான திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியிடுகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. 
 
 
ஹரிஷ் கல்யாண் படத்தில் அனிருத்!
 
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘தனுசு ராசி நேயர்களே'. இந்த படத்தை இயக்குநரும், நடிகருமான சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கியுள்ளார். ஸ்ரீகோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் இந்த படம் ரொமாண்டிக் காமெடி கதையாக உருவாகிறது. இதில் ரெபா மோனிகா ஜான், ரியா சக்கரவர்த்தி ஆகிய இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தில் இடம் பெறும் பெப்பியான பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 
 
uc8lr5cg

 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com